Tuesday 19 July 2022

நம்புங்கள் உணரு‌ங்க‌ள் .

 நம்புங்கள் உணரு‌ங்க‌ள் .

நுட்பமான சக்தி ஒன்று அனைத்தையும் சமநிலையில் வைத்திருக்கிறது.
அதனை உணருங்கள். அதனைக் கிரகியுங்கள்.
அதனிடம் திறந்திருங்கள்.
முட்டையிடுவதற்கான நேரம் வருவதற்கு முன்பாகவே பறவைகள் கூடுகளைக் கட்டத் தொடங்குகின்றன.
ஆனால் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளாமலேயே பறவை செய்து கொண்டிருக்கிறது.
யாரோ அதற்கு வழிகாட்டுகிறார்கள்.அதனை இயற்கை என்று அழையுங்கள்;
கடவுள் என்கிற வார்த்தை ஒருவேளை உங்களுக்குப் பிடிக்காவிட்டால் அதனை இயற்கை என்று அழையுங்கள்.
இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் எதுவுமில்லை, இரண்டும் ஒன்றுதான்.
ஆனால் ஒரு விஷயம் உறுதி.
விஷயங்கள் அனைத்தும் கவனிக்கப்படுகின்றன.
பிறகு எதற்கு இந்த பொறுமையின்மை, எதற்காக இந்த திட்டமிடுதல்? பிறகு எதற்காக இந்த பரபரப்பு? பிறகு எதற்காக இந்த வருத்தம்?
பொறுமையாக இருங்கள், காத்திருங்கள், நம்புங்கள், உணருங்கள்.
பார்வைக்குப் புலப்படாத கரங்கள் சுற்றிலும் வியாபித்திருக்கின்றன.
நிமிர்ந்து நிற்பதெல்லாம் பலம் என்றோ, வளைந்து கொடுப்பதெல்லாம் பலகீனம் என்றோ, முடிவெடுத்து விடாதீர்கள்.
நிமிர்ந்து நிற்கும் வேல் ஐ விட வளைந்து கொடுக்கும் வில் அம்பு தான் அதிக தூரம் பாயும்.
கிழிக்கின்ற கோடுகள் எல்லாம் கோணலாகவே போய் விடுகின்றனவே என்று வருந்தாதீர்.
கோணல் கோடுகள்தான் சித்திரமாவது. நேர்கோடுகள் அல்ல.
ஒவ்வொரு துளி நீரையும் மதியுங்கள். அது விண்ணிலிருந்து வந்தாலும் சரி கண்ணிலிருந்து வந்தாலும் சரி.
வாழ்வினிது
சிந்தித்துச் செயலாற்றுங்கள்.

No comments:

Post a Comment