Saturday 30 July 2022

வீசப்படும் கல்லும் பேசப்படும் சொல்லும்.

 வீசப்படும் கல்லும்

பேசப்படும் சொல்லும்.
உழைப்பவனின் வீட்டிற்குள் பசி எட்டிப் பார்க்குமே தவிர உள்ளே நுழையத் துணியாது.
உங்களுடைய துணிச்சல், உங்களுடைய உழைப்பு இந்த இரண்டையும் பொறுத்தே உங்கள் மகிழ்ச்சி.
உழைப்பு உண்மையாக இருந்தால் உயர்வு தானே தேடி வரும்.
ஆழம் குறைவோ அதிகமோ அடிக்க வேண்டியது நீச்சல் மட்டுமே, சோதனைகள் ஒன்றோ பலவோ செய்ய வேண்டியது முயற்சி மட்டுமே.
பயன்படுத்தாத திறமை அதன் ஆற்றலை இழந்து கொண்டே இருக்கும்.
மீண்டும் மீண்டும் முயற்சி செய்வது தான் வெற்றிக்கு ஏற்ற வழி.
நாம் விதைக்கும் நமது எண்ணங்கள் எல்லாம் விளைந்து நம்மிடமே திரும்ப வந்து சேரும்.
நன்மை, தீமை, அறம், உண்மை, பொய், ஆக்கம், கேடு, அன்பு, சினம்.
எப்படிபட்ட எண்ணங்களை விதைக்க வேண்டும் என்பதை, நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.
ஏனெனில், வாழ்க்கையில் ஒவ்வொரு நிகழ்வும், ஒரு அனுபவத்தை நமக்கு தந்து கொண்டே இருக்கிறது.
அதுபோல நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும், ஒரு பாடத்தை நமக்கு கற்றுக் கொடுக்கிறார்கள்.
ஆனால், புதிதாக கற்றுக் கொண்டே இருப்பவர்கள் வாழ்க்கையில் வென்று கொண்டே இருக்கிறார்கள்.
ஏனெனில் வாழ்க்கை நேற்று போல் இன்றில்லை, இன்று போல் நாளையும் இல்லை.
எனவே புதிது புதிதாகக் கற்றுக் கொண்டே இருங்கள், உங்கள் வாழ்க்கை புதிதாக மலரும்.
ஒருவரை நீங்கள் கண்டிக்க நேர்ந்தால் அவரைத் தனிமையில் கண்டியுங்கள்.
ஆனால், அதுவே அவரைப் பாராட்ட நேர்ந்தால் பலர் அறியப் பாராட்டுங்கள்.
எப்போதும், தேவையான இடங்களில் நன்றியையும் பாராட்டையும் சொல்ல மறந்து விடாதீர்கள்.
வீசப்படும் கல்லிலும் பேசப்படும் சொல்லிலும் என்றும் நாம் கவனமாக இருந்திடல் வேண்டும்.
ஏனெனில்,
கல் உயிரைக் கொல்லும்.
கடும் சொல்லோ உயிரோடு கொல்லும்.
கதவைப் பூட்டி வைத்து விட்டு,
உள்ளே யாரும் வரவில்லையே என கவலைப்பட்டு என்ன‌ பயன்?
காற்று கூட கண்ணுக்குத் தெரியாது தான்,
ஆனால் காற்றாடியால்
அதனை காண்கிறோம்.
உதவுவது யாரென, உதவிகள் பெறுபவர்க்கு தெரியாமலே இருக்கட்டும்....
தேவைகள் வரும்போது தான்,
இறைவன் கூடத் தேவைப்படுகிறார்...
மனதைத் திறந்து வையுங்கள்.

No comments:

Post a Comment