Thursday 20 September 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

தாவி ஏறிய எம் ஜி ஆர் .........
பொது மக்கள் அஞ்சலி செலுத்தி முடித்த பின் கண்ணதாசனின் உடல் இறுதி ஊர்வலத்திற்காக வண்டியில் ஏற்றப்பட்டது..
அப்போது கூட்டத்தில் சின்ன சலசலப்பு.
கண்ணதாசன் உடல் கிடைமட்டமாக அந்த வண்டியில் கிடத்தப்பட்டிருந்ததால் ,
கீழே நின்ற மக்களுக்கு அவரின் முகம் சரியாக தெரியவில்லை..!
கடைசியாக கவிஞர் முகத்தைப் பார்க்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் , கண் கலங்கி கதற ஆரம்பித்தனர் சிலர்..
அப்போது அங்கே நின்ற ஒரு மனிதர், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், மின்னல் வேகத்தில் வண்டி மேல் தாவி ஏறினார்.
கவிஞரின் உடலை சற்றே உயர்த்தி, ஒரு சின்ன ஸ்டூல் மீது அவரது தலையை வைத்து கட்டி விட்டு அந்த மனிதர், சுற்றி நின்ற மக்கள் முகத்தைப் பார்த்தாராம்...!
திரண்டிருந்த மக்கள் முகத்தில் இப்போது திருப்தி தெரிந்தது...!
ஆம்.. இப்போது கண்ணதாசன் முகம் , கீழே நின்ற அத்தனை பேர்களுக்கும் தெளிவாகத் தெரிந்தது..!
திருப்தியோடு அந்த வண்டியை விட்டு கீழே இறங்கிய அந்த மனிதர்தான்..
அன்றைய தமிழக முதல்வர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தான்..
அவர் கண் அசைத்தால் அடுத்த நொடியே ஆயிரம்பேர் தயாராக இருப்பர்..
ஆனால் அந்த ஒரு நொடி தாமதத்தைக் கூட எம்.ஜி.ஆர். விரும்பவில்லை..!
காரணம் கவிஞர் கண்ணதாசன் மீது எம்.ஜி.ஆர். வைத்திருந்த உயர்ந்த மரியாதை... மக்கள் உணர்வுகளுக்கு கொடுத்த உன்னத மதிப்பு...!
கண்ணதாசன் மீது எம்.ஜி.ஆர்.அவர்கள் வைத்திருந்த கண்ணியமான மரியாதையினால்தான்,
1978-ல் ‘அரசவைக் கவிஞர் ’ பட்டத்தை கண்ணதாசனுக்கு வழங்கினார் எம்.ஜி.ஆர். !
அந்த விழாவில் பேசிய கண்ணதாசன் உணர்ச்சிவசப்பட்டவராக,
‘‘நான் இறந்துவிட்டால் எனக்கு அரசு மரியாதை கிடைக்கும்... இந்த சிறப்பை எனக்கு வழங்கிய எம்.ஜி.ஆருக்கு முன்கூட்டியே நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ’’ என்று சொன்னாராம்...!
எப்படி தெரிந்ததோ கண்ணதாசனுக்கு..?
1981-இல் உயிரோடு அமெரிக்கா சென்ற கண்ணதாசன் , வெறும் உடலாகத்தான் தமிழகம் திரும்பினார்..!
ஆம்.... கவிஞன் வாக்கு பலித்தது..!
எம்.ஜி.ஆருக்காக கண்ணதாசன் எழுதிய
'சங்கே முழங்கு' பாடல் வரிகள்..
'வாழும் போது வருவோர்க்கெல்லாம்
வார்த்தையாலே நன்றி சொல்வோம்..
வார்த்தை இன்றி போகும் போது
மௌனத்தாலே நன்றி சொல்வோம்...
அந்த நாலு பேருக்கு நன்றி'
நன்றி பெரிச்சியப்பன் அழகப்பன்

No comments:

Post a Comment