Friday 28 September 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*சாணக்கியரின் முக்கியமான சக்ஸஸ் டிப்ஸ்*்:
*
🍃பல சமயங்களில் உங்களுடைய ஆற்றல் உங்களுக்கே தெரிவதில்லை. கை நிறையக் காசு வைத்திருக்கிறவன் மட்டும் பணக்காரன் அல்ல, நல்ல மூளை/சிந்தனைத்திறன், கடினமான உடல் உழைப்பு, எப்போதும் உற்சாகமாக சிரித்தபடி வேலை பார்ப்பது, நம்மை நாமே ஊக்கப்படுத்திக் கொள்வது... இவை ஒவ்வொன்றும் பெரிய சொத்துக்கள்தாம்.
*
🍃ஜெயிக்க நினைப்பவர்கள் தவிர்க்க வேண்டிய ஆறு நெகட்டிவ் குணங்கள்: ஆசை, கோபம் பொறாமை, தற்பெருமை, கர்வம், அதீத சந்தோஷம்
*
🍃 எதிலும் வெற்றி பெறுவதற்கு மூன்று வழிகள் உண்டு: நம் மூளைத் திறனைக் கொண்டு ஜெயிக்கலாம், நல்ல திறமைசாலிகளைக் கூட்டணி சேர்த்துக் கொண்டு ஜெயிக்கலாம், இவை இரண்டும் சாத்தியப்படாவிட்டால், வெறும் மன தைரியத்தைக் கொண்டே ஜெயிக்கலாம். உங்களுக்கு இதில் எது பொருந்தும் என்று யோசித்துப் பயன்படுத்துங்கள்.
*,🍃 எப்போதும் உற்சாகமாக இருக்க நான்கு விஷயங்கள் தேவை: முதலில், எதையும் எதிர்கொண்டு சந்திக்கிற தைரியம் வேண்டும். அடுத்து, நாம் இப்போது இருக்கிற நிலைமை போதாது, இன்னும் உயரத்துக்கு செல்லவேண்டும் என்கிற தவிப்பு வேண்டும். மூன்றாவதாக, ஒன்றைச் செய்ய நினைத்ததும் சட்டென்று வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு களத்தில் இறங்குகிற சுறுசுறுப்பு வேண்டும். கடைசியாக சூழ்நிலைக்கு ஏற்ப நம்மை மாற்றிக் கொண்டு வேறு பாதையில் முன்னேறுகிற சாமர்த்தியம் வேண்டும்.
🍃* உங்களுக்குப் போட்டிக்கு எவனாவது வருகிறானா? அந்த எதிரியை நசுக்கி எறிவதற்கு நீங்கள் இந்த விஷயங்களை அலச வேண்டும்:
1. நம்முடைய பலம் என்ன?
2. நாம் இருக்கும் இடம் சரியானதுதானா?
3. போட்டியாளனோடு மோதுவதற்கு இது பொருத்தமான நேரம்தானா?
4. நாம் அவனோடு மோதும்போது நமக்குப் பின்னாலிருந்து எவனாவது முதுகில் குத்த வாய்ப்பு உண்டா? 5. இந்தச் சண்டையால் எனக்கு ஏதாவது இழப்பு வருமா?
6. இந்தச் சண்டையில் ஜெயித்தால் எனக்கு வரப்போகும் லாபம் என்ன?
7. ஒருவேளை தோற்றுவிட்டால், வேறு என்ன புதுப் பிரச்னைகள் வரக்கூடும்? இந்த எட்டையும் யோசித்து, அதன்பிறகு மோதி செயல்படுங்கள்
🍃எதிரிகள் கிடக்கட்டும், நல்ல நண்பர்களை எப்படித் தக்கவைத்துக் கொள்வது? அவர்களுக்குக் கஷ்டம் வரும் நேரத்தில் கூட இருந்து உதவுங்கள். "*எப்பவும் நான் இருக்கேன்டா உனக்கு*' என்று நம்பிக்கை கொடுங்கள், அவர்கள் கவலையோடு உள்ளபோது புலம்புவதைக் காது கொடுத்துக் கேளுங்கள். வழிகாட்டுங்கள்.

No comments:

Post a Comment