Monday 17 September 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

குறைந்த பட்சம் பொய்யான தகவல்களை பரப்பாமல் இருப்பது நாட்டுக்கு நல்லது...
+++++++++++++++++++++++++++++++++
'மோடி ஒரு,ராக் ஸ்டார்...!!!
இப்படி ஒரு பிரதமர் எங்களுக்கு கிடைத்திருக்க வேண்டும்...
பாகிஸ்தான் பத்திரிகையின் உண்மை ,,
உண்மை பேச கூட ஆண்மை வேண்டும்
இந்தியாவைப் பற்றி எப்போதுமே மட்டம் தட்டி பேசுவது தான் பாகிஸ்தான் மீடியாவிற்கு பழக்கம்.
சமீபத்தில், பிரதமர் மோடி, அமெரிக்கா சென்று, அங்கு பார்லிமென்டில் உரையாற்றினார்.
இந்த பேச்சைக் கேட்ட பாக்., 'டிவி' சேனல்கள், பிரதமர் மோடியின் உரை பற்றி, பெரும் விவாதம் நடத்தின.
அதில் கலந்து கொண்ட அரசியல் விமர்சகர்கள் மற்றும் அரசியல் வாதிகள் என அனைவரும்,
மோடியை தலையில் துாக்கி வைத்து, ஆடாத குறை தான்.
இவருடைய பேச்சைக் கேட்டு, 70 முறை எம்.பி.,க் கள் கை தட்டினர்' என,சொல்லும் பாகிஸ்தான் மீடியா,
ஆறு நாட்களில், ஐந்து நாடுகள் சுற்றுப் பயணம் செய்து, ஓய்வெடுக்காமல் என்னமாய் உழைக்கிறார்' என, மோடியை பாராட்டு மழையில் நனைத்தது.
'நம்ம பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் இருக்கிறாரே தண்டத்திற்கு' என, பாக்., பிரதமரைக் கண்டனம் செய்தன பாக்., 'டிவி'க்கள் !
இது மட்டுமல்ல, இதே அமெரிக்க பார்லிமென்ட், சில ஆண்டுகளுக்கு முன், மோடிக்கு அமெரிக்கா விசா தர மறுத்தது என்பதை சுட்டிக் காட்டியபாக்., 'டிவி'க் கள்,
'மோடியோடு, 'செல்பி' எடுத்துக் கொள்ள நிறைய எம்.பி.,க்கள் வரிசையில் நின்றனர்;
இன்னொரு பக்கம், மோடியின் ஆட்டோ கிராப்பிற்காக பெரும் கூட்டம்' என்று வர்ணித்தன.
இதையெல்லாம் விட ஒரு படி மேலே போய், 'மோடி ஒரு ,ராக் ஸ்டார்' எனவும் அழைத்தன.
'மோடி பிரதமராக பாகிஸ்தானுக்கு இருந்திருக்கக் கூடாதா' என பாக்., 'டிவி' செய்தியாளர்கள், ஏக்கத்தோடு கூறினர்.
அவர் இந்தியாவிற்காக உழைப்பது, கடவுளுக்கு தெரிந்தால் போதும். யாருக்கும் நிரூபித்து காட்ட வேண்டும் என்கிற அவசியமில்லை..
உள்ளூர் பத்திரிக்கைகள் கடின உழைப்பின் மூலம் சாதிக்கும் மோடியை பாராட்டா விட்டாலும்
குறைந்த பட்சம் பொய்யான தகவல்களை பரப்பாமல் இருப்பது நாட்டுக்கு நல்லது...
--Kalavathy Kala

No comments:

Post a Comment