Wednesday 26 September 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

மலிவான நகைச்சுவையை மக்கள் ஏற்க மாட்டார்கள்....
நகைச் சுவை என்ற பெயரில் நரகலை அள்ளி வீசுகிறார்கள் நம் தமிழ் படங்களில்!
சமீபத்தில் வந்த’ சீமை ராஜா’ நகைச்சுவை வறட்சிக்கு நல்ல எடுத்துகாட்டு!
விவஸ்த்தையின்மை,அசிங்கம்,ஆபாசம்,மற்றவரை இழிவு செய்வது இவையே நகைச்சுவை என்பது பெரும்பாலான சினிமாகாரர்களின் புரிதலாகவுல்லது.
மூன்று பெண்டாட்டி வைத்துக் கொண்டு அம்மணமாக அண்டாவில் குளிப்பது,
ஓணான் மாதிரி வாயைப் பொளந்து அசிங்கமாக ஆபாசத்தை அர்சிப்பது,
கல்விக் கூடத்தில் தலைமை ஆசிரியரும், தலைமை விருந்தினரும் போட்டி போட்டுக் கொண்டு காமாந்திர சேட்டை பண்ணுவது..
இதெல்லாம் நகைச்சுவையல்ல, நரகல் சுவை..!
நரகல் சுவை பன்றிகளுக்கானது...
நகைச்சுவை ஆறறிவு மனிதனுக்கேயான தனிச் சிறப்பு!
உண்மையில் நகைச்சுவை என்பது ஒரு மேதமை!
நம் சினிமாக்களில் வெளிப்படுவதெல்லாம் பேதமை!
அஞ்சாமை,
அறிவுக் கூர்மை,
பாசாங்குத் தனங்களைத் தோலுரிக்கும் பட்டவர்த்தனமான நேர்மை,
பொய்மைகளை விலக்கி உண்மைகளை அடையாளப்படுத்தும் தேடல்,
அளப்பரிய மானுட நேயம்,
சமரசமற்ற ஆளுமைத்திறன்..
இதன் வழியே பீறிட்டு வெளிப்படுவதே நகைச்சுவை!
இந்த அடிப்படை புரிதல் கூட இல்லாமல்,எவ்வளவு தொழில்நுட்ப பிரமாண்டம் ஏற்பட்டும் பயனில்லை.
நண்பன் பத்திகையாளர் டி வி எஸ்சிடம் வறுத்தபட்டபோது சொன்னார், கண்ணன், இந்த மாதிரி படம் பார்க்கும் போது மூளையை கழட்டி வச்சுட்டு பார்க்கணும்னு சொன்னார்.
பார்க்கிறவங்க மூளையை கழட்டி வச்சிடணும்னா..
படம் எடுப்பவர்கள் மூளையை தூக்கி எறிஞ்சிட்டுத் தான் எடுப்பார்களோ...கொடுமை!
நன்றி திரு. சாவித்திரி கண்ணன், மூத்த பத்திரிகையாளர்

No comments:

Post a Comment