Tuesday 18 September 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

மனித உயிர்களின் காவலர்....
மதுரையின் மற்றுமோர் மகத்துவம்..
மதுரை அரசு மருத்துவ மனையின் கதிரியக்க இயற்பியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வரும் டாக்டர் செந்தில் குமார்,புற்று நோய் சிகிச்சைக்கான தன் புதிய கண்டு பிடிப்பை அறிமுகப்படுத்தியுள்ளார்.
மனிதத் திசுக்களுக்கு இணையாகப் புதிய திசுக்களை இவர் உருவாக்கியிருக்கிறார்.இத்திசுக்களை நோயாளியினது உடலின் மீது பொருத்தி சிகிச்சை செய்தால், முழுமையான பலன் கிடைக்கும் என்கின்றார் இவர்.
ராஜஸ்தானில் நடைப்பெற்ற கருத்தரங்கில் இவரது இந்த கண்டு பிடிப்புக்காக முதல் பரிசை பெற்றிருக்கிறார்.
அவர் பேசுகையில்"அறிவியல் பூர்வமாக எனது இந்தக் கண்டுபிடிப்பு உறுதி செய்யப்பட்டு விட்டது. நோயாளிகளின் சிகிச்சைக்கு இவற்றைப் பயன்படுத்துவதற்கு மருத்துவமனை டீன்,ஒப்புதல் தந்திருக்கிறார்.மேலும்,இந்தக் கண்டுபிடிப்பின் வழியாகச் செய்யப்படும் கதிரியக்க சிகிச்சையால்,தோல் புற்று நோயின் ஆரம்பக்கட்டத்தில் இருப்பவர் தொடங்கி,நோய் முற்றிய கட்டத்தில் உள்ளவர் வரையிலும் எவரும் முழுமையான பலனை பெற இயலும்" என உறுதியாக கூறுகிறார்.
இதுவரை இவரது கண்டுபிடிப்புகள் 50 ஐத் தொடுகின்றது.
இவரது 50 கண்டுபிடிப்புகளும், கேன்சரைக் குணமாக்கும் மருத்துவ சிகிச்சைகளில் குறைந்த செலவில் நிறைந்த தரத்தை அளித்து நோய் தீர்வதற்கு வசதி செய்யும் வகையிலான மருத்துவ சாதனங்கள்தான்.
இவற்றுள் 17 கண்டு பிடிப்புகளைச் 'சிறந்த கண்டுபிடிப்புகளாக' இந்திய மருத்துவதுறை அங்கீகரித்துள்ளது. குறிப்பாகத் 5 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமையும் பெற்றுள்ளார்.
2010-ம் ஆண்டு,'இளம் கண்டுபிடிப்பாளர்' விருதையும் பெற்றுள்ளார்.
2008 -ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரையிலான பத்தாண்டுகளில் சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளுக்காக,17 விருதுகளைப் பெற்றுள்ளார்.
2017-ம் ஆண்டின்'பாரதரத்னா இந்திராகாந்தி தங்கப்பதக்கத்தைப்' பெற்றுள்ளார்.
மும்பையின் 'கதிரியக்கப் பாதுகாப்பு அதிகாரி விருதை' பெற்றுள்ளார்.
அவர் கூறுகிறார்"நோய்க்கான மருத்துவம் முழுமையாய் நோயாளியைச் சென்றுடைந்து நோயைக் குணப்படுத்த வேண்டும்.அதற்கு மருத்துவராய் எல்லா வகையிலும் என்னை அர்பணித்து என் பணியைத் தொடர்ந்து கொண்டே இருப்பேன்" என்று.
டாக்டர் திரு செந்தில் குமார் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகளும் பிரார்த்தனையும்.
நன்றி திரு ராஜப்பா தஞ்சை

No comments:

Post a Comment