Wednesday 22 August 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

படித்ததில் பிடித்தது - யார் விட்டுக்கொடுப்பது?
ஒரு நிகழ்ச்சி ஒன்றில் ஞானி ஒருவர் இல்லற வாழ்க்கையைப் பற்றி பேசிக்கொண்டு இருந்தார்.
இல்லற வாழ்க்கை சிறப்பாக அமைய ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்பது, அனுசரித்துச் செல்வது, பொறுத்துப்போவது ஆகிய மூன்று பண்புகளை பின்பற்ற வேண்டும் என்றார். அப்போது ஒரு பெண் எழுந்து, 'விட்டுக்கொடுத்துப் போகவேண்டும் என்று பொதுவாக சொல்கிறீர்கள். யார் விட்டுக்கொடுத்து போக வேண்டும்? கணவனா? மனைவியா? பிரச்சனை அங்கு தானே ஆரம்பிக்கிறது" என்று கேட்டார்.
அதற்கு ஞானி பதிலளிக்கையில், 'யாரிடம் அன்பு அதிகமாக இருக்கிறதோ, யார் அறிவாளியோ அவர்கள் தான் முதலில் விட்டுக்கொடுப்பார்கள். அவர்கள் தான் அனுசரித்துப் போவார்கள். அவர்கள்தான் பொறுமைசாலிகள்" என்றார். இப்போது கூறுங்கள், உங்கள் வீட்டில் யார் விட்டுக்கொடுத்துப் போவது?????
நன்றி திரு லெட்சுமணன்

No comments:

Post a Comment