Monday 27 August 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

ஒரு முறை, C P. Ramaswamy Iyer வீட்டிற்கு, ஒரு வெள்ளைக்கார்ர், விருந்தாளியாக வந்திருந்தாராம்.
ஐயரின் தாயார், விருந்தாளிக்கு உபசாரம், விருந்தோம்பல் செவ்வனே செய்தாராம். ஐயரின் தாயார் ஒரு "மடியான பாட்டி"; தலையில் புடவை போட்டுக்கொண்டவள்.
விருந்தோம்பலில், ஒரு பிசிறு கூட இல்லை.
விடை பெறும் சமயம், வெள்ளைக்காரன், ஐயரிடம் கேட்டாராம்: " உங்கள் தாய், மெத்த படித்தவரோ?"
உடனே ஐயர் பதிலளித்தாராம்:
"My mother is not literate; but educated"
( "என் தாயார் பள்ளிப்படிபபு பெறவில்லை; ஆனால் கலாசாரம், பண்பு, பணிவு முதலியன நிரம்பிய வள்") என்றார்.
Education - கல்வி - என்பது வெறும் degree பெறுவது அல்ல.
வெறும் degree - பட்டம் பெறுவது "படித்த" - literate என்றே பொருள் படும்.
Educated என்றால், ஒருவனது நடை உடை பாவனை, விருந்தோம்பல், ஈவு, இரக்கம், சமூக சிந்தனை, சமூக நலனில் அக்கறை, பெரியோர் வார்த்தைகளை மதித்தல், அண்டை வீட்டுக்காரனின் நலனிலும் அக்கரை கொள்ளுதல் போன்ற உயர்ந்த பண்புகளை உடையவன் எனறு பொருள் படும். படிப்பறிவு என்பது ஒரு bonus தான்.
தற்பொழுது, சமூக வலை தளங்களில், பாலக்காட்டை சேர்ந்த ஒரு மலையாளியின் video ஒன்று சுற்றிக்கொண்டிருக்கிறது: அதாவது, தமிழர் பெரும்பாலும் படித்தவர் அல்ல. சுத்தம் பத்தாது; ஆகையால் தமிழர் மீது தங்களுக்கு நல்ல அபிப்ராயம் இருந்த்தில்லை.
இப்பொழுது, இந்த வெள்ளம் என்ற பேரிடரில், தமிழர் தங்களின் சுத்தமான, பண்பான உள் மனதை காண்பித்து விட்டார்கள்.
இந்த பேரிடரில் தாங்கள் உண்ணும் உணவும், குடிக்கும் நீரும் தமிழர் அனுப்பியது தான்.
எல்லா வண்டிகளும் பாலக்காடு வழியாகத்தான், கேரளா உள்ளே செல்ல வேண்டும்.
தினமும் ஏகப்பட்ட load உணவுப்பொருட்கள் சென்ற வண்ணம் உள்ளன.
தமிழரின் நல்ல உள்ளம் கண்டு நெகிழ்ந்தோம். என்கிறார் அந்த பாலக்காட்டு மலையாளி.
ஆம். பள்ளிப்படிப்பு எப்ப வேணுமானாலும் அடைய முடியும்.
ஆனால், இன்னலில் உள்ளாரை விடுவிக்க எடுக்கும் முயற்சி என்பது ரத்தத்தில் இருக்கணும்.
நமது இலக்கியங்களும் நமக்கு
" இன்னா செய்தாரை ஒறுத்தல்,அவர்நாண நன்னயம் செய்து விடல் "
என்றே சொல்லித்தருகிறது.
100% பள்ளிப்படிப்பு பெற்ற ( literates)மலையாளிகள், கொஞ்சம் சிந்தனை செய்து, தங்களிடம் என்ன குறை என்ற்றிந்து, ஈவு, இரக்கம், செய்நன்றி மறவாமை மேலும் பல நற்பண்புகளையும் பெற்று வளருவார்கள் என்றும் நம்புகிறோம்.
இனியாவது, கேரளம், தமிழ் நாட்டோடு நீர் வளத்தை பங்கு போடுமா?!?!? அப்படி செய்தால், அதுவே தமிழகத்தின் சார்பில் ஒரு பெரிய பாராட்டு விழா எடுத்ததற்கு சம்ம்.
நன்றி பார்வதி சுப்பிரமணியன்

No comments:

Post a Comment