Friday 24 August 2018

ஆறுமுகத் தமிழனின் பக்தி மரபு உரை நிகழ்வு.

ஆறுமுகத் தமிழனின் பக்தி மரபு உரை நிகழ்வு.
என்ன ஒரு உரை! சென்னையில் எண்ணற்ற சித்தர்கள் இருந்திருந்தாலும், நகருக்கு பரதேசிகளான (வெளியூரில் இருந்து வந்த பட்டினத்தார், குணங்குடியார், வள்ளலார்) மூவர் குறித்த கரு. ஆறுமுகத்தமிழனின் "சென்னையின் சித்தர்கள்" உரை இன்று ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் செவிக்கினிதாக சிந்திக்க வைப்பதாக அமைந்தது. சுவாரசியமான சென்னை தின நிகழ்வுகள் பல இன்று இருந்தாலும் அரங்கம் நிறந்திருந்தது. உணர்வுப்பூர்வமான பக்தி மரபு, அறிவுப்பூர்வமாக (உடம்பு இல்லாவிடின் ஒன்றுமில்லை என்று) அணுகும் சித்தர் மரபு என்று ஒரு மணி நேர ஆறுமுகத்தமிழன் உரையில் சிந்திப்பதற்கு நிறைய இருந்தது. நல்லதொரு சென்னை தின உரை.
#MadrasWeek2018



No comments:

Post a Comment