Wednesday 29 August 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

.............................................
'விளையாடுங்கள்... விளையாடுங்கள்..''..
.............................................
விளையாட்டு என்பதனைப் படிப்பை கெடுக்கக்கூடிய செயலாகவும், பொழுதுபோக்குக்கான அடையாளம் ஆகவே, பலரும் நினைக்கிறார்கள்.
ஆனால், விளையாட்டு என்பது மிகப் பெரிய உடற்பயிற்சி.அதுவும் எண்ணற்ற பலன்களைக் கொண்ட மனமகிழ்ச்சி தரும் உடற்பயிற்சி’’
விளையாட்டால் அனைத்து உடல் உறுப்புகளும் ஒருங்கிணைக்கப்பட்டு, உடல் மற்றும் மனநலன் பேணப்படுகிறது.
20, 25 வருடங்களுக்கு முன்னர், ஓய்வு நேரம் என்றால் வீட்டிலுள்ள பெரியவர்கள் சிறுவர், சிறுமியரை ‘வெளியே சென்று விளையாடுங்கள்’ என்று அனுப்புவது வழக்கமாக இருந்தது.
இன்றைய தலைமுறையினரிடம்,ஓய்வு நேரத்தைப் பயன்படுத்தும் விதம் மாறி விட்டது.
விளையாடுவதால் உடல் நலம் பேணப்படுவதோடு, அறிவாற்றல் வளர வழிவகுக்கும்;
கல்வித்திறன் அதிகரிக்கும் விளையாட்டு என்பது உடல் நலம் மட்டுமில்லாமல், மன நலமும் சார்ந்தது.
விளையாடுதல் காரணமாக, மாணவ, மாணவியரின் உள்வாங்கிக் கொள்ளும் திறன் அதிகரிக்கும்.
விளையாடிய பின்னர் படிக்கும் மாணவ, மாணவியர்
மூன்று மணி நேரத்தில் படிப்பதை அரை மணி நேரத்தில் படித்து விடுவார்கள். மன அழுத்தத்தைக் குறைத்து அமைதி தருவதால் எல்லோருக்கும் விளையாட்டு மிகவும் அவசியம்.
உலக சுகாதார மையம்(World Health Organisation) நடத்திய ஓர் ஆய்வின் முடிவில், 2010-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்த குழந்தைகள் உடல் நலக் குறைபாட்டால் பெற்றோருக்கு முன்னர் இறப்பார்கள் எனக் கண்டறியப்பட்டது அதிர்ச்சி தந்தது.
இதைத் தவிர்க்க, மருத்துவமனைகள் தேவையில்லை.
விளையாட்டு மைதானங்கள்தான் இன்றைய முக்கிய தேவையாக உள்ளது.
அதிலும், குறிப்பாக, உள்ளரங்கு விளையாட்டுத் திடல்கள்தான் அதிகளவில் தேவைப்படுகின்றன.
ஏனென்றால், நகரங்கள் மட்டும் இல்லாமல், கிராமப்புறங்களிலும் காற்று மாசு அதிகரித்து வருகிறது.
இந்நிலை நீடித்தால் தற்போது உள்ள மருத்துவ மனைகள் கண்டிப்பாக போதாது. இந்த நோய்கள் எல்லாம் போதிய உடல் உழைப்பு இல்லாத காரணத்தால், நாமே வரவழைத்துக்கொண்ட நோய்கள்.
இந்த ஆபத்தான அவல நிலையை நம்மால் நிச்சயம் தவிர்க்க முடியும்.
பள்ளிக்குச் செல்லுங்கள்: டியூஷனுக்குப் போங்கள்’ எனக் குழந்தைகளை அறிவுறுத்துவதுபோல்,மாலை நேரங்களில் விளையாட செல்லுங்கள்’ எனவும் சொல்லித் தர வேண்டும்.
இன்றைய தலைமுறையினர், ஆடம்பரமான சொகுசு வாழ்க்கை வாழ்ந்தால் போதும் எனக் கருதுகின்றனர். இது கொஞ்ச நேரம்தான் நீடிக்கும். இந்த நிலை மாறா விட்டால், மருத்துவமனைகளில் நாமும் ஓர் அங்கமாக மாறி விடுவோம்.
நோய்கள் வராமல் தடுக்க உடல் ஆரோக்கியம் மிக அவசியம். இதை பின்பற்றாத இடத்தில் உலகப்போரில் உயிரிழந்தவர்களைவிட, அதிகமாக உயிரிழக்க நேரிடும்;
உடலுக்குத் தேவையான உழைப்பு; மனதுக்குத் தேவையான அமைதி என ஆரோக்கியத்துக்கு இன்றியமையாத எல்லா மருந்துகளும் நமது உடலில் உள்ளன.
ஆம்.,நண்பர்களே..,
விளையாட்டின் மூலம் குழு மனப்பான்மையும் வளரும்..
கால்பந்தோ,ஆக்கியோ,கைப்பந்தோ,இறகுப்பந்தோ நமக்குத் தெரிந்த, நமக்குப் பிடித்த ஏதேனும் ஒரு விளையாட்டு விளையாடுவதை வழக்கமாகக் கொண்டால் ஆரோக்கியமான வாழ்வு நிச்சயம்!🌷🙏🏻
நன்றி வ உ சி வா சிதம்பரம்

No comments:

Post a Comment