Thursday 23 August 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

இப்படியே இருங்கள்....
மாறிவிடாதீர்கள்.................
நான் ஒரு மலையாளி!
எனக்கு என் மண்ணும் மக்களும்தான் பிடிக்கும்,
பிற மாநிலத்தவரை பிடித்தாலும்
தமிழர்கள் என்றால் எப்போதுமே அலர்ஜிதான்!
படிப்பறிவு குறைந்தவர்கள்,
நாகரீகமற்றவர்கள்,
பொது இடத்திலும்
சாலையோரங்களிலும்
சிறுநீர், மலம் கழிப்பவர்கள்,
இங்கிதம் தெரியாதவர்கள்,
தற்பெருமை பேசுபவர்கள்,
எங்கள் மாநிலத்துக்குள் பிளாஸ்டிக்
வியாபாரம் செய்வது போல் வந்து
வீட்டுக்குள் நுழைந்து திருடிச்செல்பவர்கள்,
இன்னும் என்னென்னவோ குறைகளை
அடிக்கிக்கொண்டே போயிருக்கிறோம்,
தமிழர்கள் என்றாலே, பாண்டி, பட்டி என்று
கேவலமாகத்தான் பார்ப்போம்,
எங்கள் மாநிலத்துக்குள் வந்திருந்தால்
உங்கள் மீதான எங்களின் இந்த பார்வையை
ஒருவேளை நீங்கள் கொஞ்சம்
புரிந்திருக்கலாம்,
மலையாளிகளுக்கு எப்போதுமே
தமிழர்களை அவ்வளவாக புடிக்காது,
சென்னையிலும் கடலூரிலும்
வெள்ளம் வந்தபோது
நாங்கள் பெரிதாக கவலைப்பட்டது கூட
கிடையாது,
வெறுமனே வேடிக்கை மட்டுமே
பார்த்துக்கொண்டிருந்தோம்,
பொதுமக்கள் கூடி
நிவாரணப்பொருட்கள் எதையும்
உங்களுக்கு அனுப்பி வைத்ததில்லை,
சிட்டியை பிராப்பரா பிளான் பண்ணலன்னா
இப்படித்தான் நடக்கும் என்று
நண்பர்களுடன் கிண்டலடித்திருக்கிறோம்,
இன்று எங்கள் மாநிலத்திலும்
வெள்ளம் வந்துவிட்டது,
நான்கு நாட்களாக
எல்லா பொருட்களையும்,
வீடு உடைமைகளையும் இழந்துவிட்டு
ரோட்டோரத்தில் நின்றுகொண்டிருக்கறோம்,
நான்கு நாட்களாக
முன்பின் தெரியாத, முகமரியாத
தமிழர்கள் தான் வேனில் கொண்டுவந்து
வேளாவேளைக்கு சோறுபோட்டுக்கொண்டு
இருக்கிறார்கள், அவர்களுடைய
ஆடைகளை தான்
உடுத்திக்கொண்டிருக்கிறோம்,
அவர்களுடைய போர்வைகளை தான்
போர்த்திக்கொள்கிறோம்,
நேப்கின்கள் வரை கொண்டுவந்து
கொடுத்த உங்களை
நிமிர்ந்து பார்க்க முடியாமல் தான்
எங்கள் வீட்டு பெண்களுக்காக
வாங்கிக்கொண்டோம்,
இரவு பகல் பாராமல்
வரிசை வரிசையாக
நிவாரணப்பொருட்களை சுமந்த
உங்கள் ஊர் லாரிகள்
போய்க்கொண்டே இருக்கின்றன,
கேரளாவின் வயிறு இப்போதும் கூட
உங்களால் தான் நிரம்பிக்கொண்டிருக்கிறது,
உங்களிடம் எங்களுக்கு ஆயிரம்
குறைகள் தெரிந்தது,
ஆனாலும் அத்தனையும் தாண்டி
நீங்கள் எங்களை விட
பலமடங்கு அன்பானவர்கள்,
இரக்ககுணம் கொண்டவர்கள்,
எதிரியாக இருந்தாலும்
அவனை பசியோடு பார்க்க
விரும்பவில்லை உங்கள் மனம்,
நீங்கள் இப்படியே இருங்கள்,
மாறிவிடாதீர்கள்,
நாங்கள் மாறிக்கொள்கிறோம்,
புரிந்துகொள்கிறோம்,
நான் புரிந்துகொண்டேன்,
மாறிவிட்டேன்!
உங்கள் அன்பிற்கும் கருணைக்கும்
தலைவணங்கும் பெயர் வெளியிட
விரும்பாத ஒரு மலையாளி!
—அஷோக்குமார்

No comments:

Post a Comment