Saturday 23 June 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

குற்றாலம் குற்றாலம் சிறப்பு சிறப்பு
உலகில் எத்தனையோ அருவிகள் இருந்தாலும் இந்த குற்றால அருவிகள் மட்டும் உலகப்புகழ் பெற்றது ஏன்..?
வாருங்கள் ஆராய்வோம்..
இந்த அருவிக்கான நீரானது பொதிகை மலையில் உள்ள மூலீகைச்செடிகள், கொடிகள், இலைகள், வேர்களுடன் நீராடி குற்றால அருவியாக கொட்டுகிறது...
இதனால் இந்தருவிகளில் குளிப்பவர்களுக்கு நோய், பிணி நீங்குகிறது...
அடுத்து
இந்த அருவியானது சரியான உயரத்தில் தரையில் விழுவதால்...
சுற்றுலாப்பயணிகளின் மேனிக்கும் தலைக்கும் இலவச மஜாச் செண்டராக அமைந்துள்ளது,
ஆம் மற்ற ஊர் அருவிகளில் நீங்கள் கவனித்தால் மிக உயரமான அல்லது மிக குறைவான உயரத்தில் உள்ள அருவிகளாகவே பார்த்துருப்பீர்கள்...
ஆனால் குற்றால அருவியின் நீரானது சரியான உயரத்தில், அல்லது உயரம் அதிகமாகவே இருந்தாலும் ஜம்ப் பண்ணி வருகிற மாதிரி படிக்கட்டுகள் போல் அமைந்திருக்கும்...
இதனால் சரியான உயரத்தில் பரந்து விரிந்து விழும்போது நம் தலைகளுக்கு மஜாஜ் செய்வது போல் அமைந்திருக்கிறது...
இந்த மஜாஜ்ஜானது நம் நரம்புகளுக்கும் உடல் சதைகளுக்கும் புத்துணர்ச்சி கொடுக்கிறது...
சில பேர் அருவிக்கு நேராகவே தலையை நீட்டி குளிப்பார்கள்..
அவ்வாறு குளிக்க கூடாது,
அருவிக்கு எதிர்த்திசைக்கு நம் முகம் வருகிற மாதிரி திரும்பி குளிக்க வேண்டும்...
எதற்காகவென்றால், நமது உடலில் அத்தனை நரம்புகளும் நம் தலையின் பின்புறம் உள்ள பொடதியில் தான் சந்திக்கிக்கிறது
இதனை கொண்டை முடிச்சு என்று கூட சொல்வார்கள்...
இந்த பின்னந்தலையில் அருவியின் தண்ணீர் மோதுமாறு குளித்தால் உடலில் உள்ள அனைத்து நரம்புகளும் புத்துணர்ச்சி அடையும்...
அடுத்து
மற்ற ஊர் அருவிகளில் நின்று குளிக்க போதுமான இடம் இருக்காது..
அல்லது தண்ணீருக்குள் நின்று தான் குளிக்க வேண்டிருக்கும்,
ஆனால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் நல்ல நிதானமாக நின்று குளிக்கும் வகையில் போதுமான இயற்கை இட அமைப்பை பெற்றுள்ளது...
அடுத்து
பெரும்பால அருவிகளில் நீண்ட நேரம் குளிக்க முடியாது..
ஏனெனில்
பனிக்கட்டி போன்று ஜில்லென்று நீர் இருக்கும்..
இதனால் உடல் மரத்து போகும்...
ஆனால்
குற்றால அருவி நீர் அதிகமான குளிரும் இருக்காது
எவ்வளவு வெயில் அடித்தாலும் வெப்பமாகவும் இருக்காது...
இதனால் குற்றால அருவிகளில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் குளிக்கலாம்...
இன்னொரு அதிசயமான உண்மை என்னவென்றால் குற்றால அருவிகளில் விடிய விடிய குளிச்சாலும் சளியும் பிடிக்காது காய்ச்சலும் வராது...
மேலும்,
குற்றால நகரில் மிதமான தட்பவெப்பநிலை,
லேசான சாரல்,
ரம்மியமான தென்றல்,
அவ்வப்போது மிதமான மழை
இந்த இயற்கை சூழல்கள் தான்....
சுற்றுலா பிரியர்களை குற்றாலம் நோக்கி படையெடுக்கச்செய்கிறது...
வாருங்களேன் நாமும் அனுபவிப்போம் இப்பேரானந்தத்தை...

No comments:

Post a Comment