Friday 29 June 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

இன்றைய சிந்தனை..( 28.06.2018..)..
.............................................
''தற்புகழ்ச்சி..''
.......................
போதைகளில் மீளா கடும் போதை - மயக்கங்களிலேயே ஏலா மயக்கம் - எது தெரியுமா?
தற்புகழ்ச்சிதான்.
எவ்வளவு சிறந்தவர்களையும் வீழ்த்தும் படுகுழி தற்புகழ்ச்சிதான்!
பல நண்பர்கள் பேசும் பேச்சுகளிலே ‘நான், நான், நான்,’ ‘தான்’; மறந்தும் ‘நம்ம’, ‘நாங்கள்’, ‘எங்கள்’ என்று அவர்களின் வாய்களில் வரவே வராது!
கேட்பவர்கள் மனதிற்குள் அருவருப்பு அடைவார்களே என்ற எண்ணம்கூட இல்லாமல் இப்படி தங்கள் ‘சுயபுராணத்தை கூறிக்கொண்டே இருப்பார்கள்
கிரேக்க ஞானி சாக்கரட்டீசின் அறிவுத் திறனை அகிலமே பாராட்டுகிறது இன்று!அவரோ எனக்குத் தெரிந்ததெல்லாம் என் அறியாமை ஒன்றுதான் என்றார்!என்னே தன்னடக்கம்!
உலகின் ஈடுஇணையற்ற நீதிநூலான திருக்குறளைப் படைத்த திருவள்ளுவர் ஆயிரத்து முந்நூற்று முப்பது குறட்பாக்களில் ஓர் இடத்தில் கூடத் தன்னைப் பற்றித் தற்பெருமையாகப் பேசிக் கொண்டதில்லை..
வள்ளுவர் சொன்னவர் மட்டுமல்ல, சொன்னபடி வாழ்ந்தவர் என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது.
தன்னைக் காப்பது நோய் நொடிகளிலிருந்து மட்டும் அல்ல.நோய்களில் கொடிய நோயான தற்புகழ்ச்சியில் இருந்தும்தான்..,
ஆம்.,நண்பர்களே..,
அழிவைத்தரும் தற்பெருமை வேண்டாம்.எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் மற்றவர்களுக்கு நல்ல செயலை செய்வோம்..,🌸🙏🏻🌷

No comments:

Post a Comment