Monday 25 June 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

சுவாமி விவேகானந்தர் ஆன்மீக சொற்ப்பொழிவு ஆற்றிக் கொIண்டிருந்தார்.
ஒருவன் குறுக்கிட்டுக் கேட்டான்,
"ஆண்டவனை அடைய நாம் ஏன் ஆலயம் செல்ல வேண்டும் ?
ஆலயமின்றி ஆண்டவனை அடைய முடியாதா? என்று
கேட்ட கேள்விக்கு பதில் சொல்லும் முன், அவனிடம்
கொஞ்சம் தண்ணீர்
கிடைக்குமா ? என்று....
அவன் ஓடிப் போய்
ஒரு சோம்பு நிறையத் தண்ணீர் கொண்டுவந்தான்.
சுவாமி கேட்டார்
நான் தண்ணீர்தானே கேட்டேன்..எதற்கு இந்த செம்பு.?
செம்பு இல்லாமல் தண்ணீர் கொண்டு வரமுடியாதா?
குழம்பிப் போனான்
அது எப்படி முடியும்? என்று கேட்டான்.
இப்போது பதில் சொன்னார் சுவாமி ...
ஆம் சகோதரனே.
தண்ணீரைக் கொண்டுவர செம்பு தேவைப் படுவது போல,
ஆண்டவனை உணர்ந்து மகிழ, ஓர் இடம் வேண்டாமா?
அதுதான் ஆலயம்..!
ஆனாலும்
செம்பே தண்ணீர் ஆகாது..!
ஆலயமே ஆண்டவனாகாது..!

No comments:

Post a Comment