Thursday 21 June 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

திருப்பதி போய் வருபவர்களிடம் லட்டு பிரசாதம் எங்கே என்று ஆளாய்ப் பறப்போம்...
ஆனால், அது திருமலையை சுமார் தொன்னூறு வருடம் நிர்வாகம் செய்த மகந்துகளின் காலத்தில், அதாவது 1930 காலகட்டத்தில் வந்தது....
லட்டு போலவே ஆயிரம் அன்னக் கட்டளைகள் உண்டு....
ஒவ்வொரு நைவேத்தியத்திற்கும் படை என்று பெயர்....
இட்லிப்படை, தோசைப்படை, பருப்பவியல் படை, சீடைப் படை, திருக்கண்ணமுதுப் படை, அப்ப படை, திருப்போனகப் படை இப்படி பல உண்டு..... ஏன்..? சுகியன், குழிப்பணியாரம், பால் குழம்பு எல்லாம் உண்டு....
ஆனால் திருமலை கோவிலின் குலசேகரப் படிக்கட்டைத் தாண்டி எதுவும் உள்ளே போகாது..... ஒன்றைத் தவிர.... ஆயிரத்து நூறு ஆண்டுகளாக....
காலைச் சந்தி நைவேத்யம் எனும் அதிகாலை பிரசாதம் மட்டுமே குலசேகரப் படியினைத் தாண்டி உள்ளே செல்ல முடியும்...
அதற்கு மாத்ர என்று பெயர்....
மாத்ர என்றால், நாலு நாழி சுத்தச் சம்பா அரிசியைச் சமைத்து, பசுந்தயிரும், சிறிதளவு சுக்கும் சேர்த்து தயாரிக்கப்பட்ட நைவேத்யம் ஆகும்....
இதனை தினமும் புத்தம் புதிய மண்பானையில் தான் சமைப்பார்கள்.... அதன் பின் அந்தப் பானை உடைக்கப்படும்... அடுத்த நாள் புதியது....
இந்த பானை வாங்கித் தர உரிமை கொண்ட குடும்பத்திற்கு குமார ஸ்வரூபம் என்று பெயர்....
தினசரி மடைப்பள்ளி நாச்சியாருக்கு பூஜை செய்து, அதன் பிறகே இது தயாரிக்கும் பணி தொடங்கும்.... அவள் தான் மடைப்பள்ளியின் காவல் தெய்வம்...
இந்த நைவேத்யம் தயாரிக்கும் பணிக்கு நீர் எடுக்க தனிக்கிணறு உண்டு... அதனை பங்காரு பாலி, அதாவது தங்கக் கிணறு என்பார்கள்....
ஓகே...
இனி திருப்பதி போறவங்க எல்லாம் எவ்வளவு செலவு பண்ணியாவது, இந்தப் பிரசாதத்தைக் கேப்ச்சர் பண்ண முடியுமான்னு பாருங்க.....🙏🏻👍🏻

No comments:

Post a Comment