Monday 25 June 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*காலம் தந்த கண்ணதாசன்*
-------------------------------
🍁 *அகர முதல* எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி........
*ஆதிபகவன் முதல் என்றே உணரவைத்தாய் தேவி...........*
🍁 ஏடு தந்தானடி *தில்லையிலே* அதைப் *பாட வந்தேன் அவன் எல்லையிலே !*
🍁 *மன்னவன் வந்தானடி தோழி*
மஞ்சத்திலே இருந்து *நெஞ்சத்திலே* கலந்த மன்னவன் வந்தானடி ! *மாயவனோ நாயகனோ*....நானறியேன்.
🍁 மறைந்திருந்தே பார்க்கும் *மர்மம் என்ன?*
அழகர் *மலையழகா இந்தச் சிலையழகா !* சென்று...........
🍁 *மயக்கமா ?* கலக்கமா *மனதிலே* குழப்பமா ? வாழ்க்கையில் *நடுக்கமா ?*
🍁 *வீடு வரை உறவு*
வீதி வரை மனைவி *காடு* வரை பிள்ளை..... *கடைசி வரை யாரோ !.......*
🍁 *உள்ளத்தில் நல்ல உள்ளம்* உறங்காது என்பது *வல்லவன்* வகுத்தடா !கண்ணா............ வருவதை *எதிர் கொள்ளடா...........*
🍁 *பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது* கருடா சௌக்கியமா ! *யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்* எல்லாம் சவுக்கியமே ! *கருடன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது.*
🍁 *கேள்வி* பிறந்தது அன்று நல்ல பதில் கிடைத்து இன்று ! *ஆசை பிறந்தது அன்று யாவும் நடந்தது இன்று !*
🍁 *காற்று வாங்கப் போனேன்* ஒரு கவிதை வாங்கி வந்தேன் ! *அதை கேட்டு வாங்கிப் போனால் அந்தக் கன்னி என்னவானாள் !* நான்.........
🍁 *சட்டி* சுட்டதடா கை விட்டதடா *புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா !*
🍁 ஆறு மனமே ஆறு *அந்த ஆண்டவன் கட்டளை ஆறு !*
*நினைக்க தெரிந்த மனமே* உனக்கு மறக்கத் *தெரியாதா !*
*பலகத் தெரிந்த மனமே* உனக்கு விலகத் *தெரியாதா !*
🍁 அந்த நாள் *ஞாபகம்* நெஞ்சிலே வந்ததே *நண்பனே! நண்பனே !!.....*
🍁 நாளை எந்தன் வேளை பார்த்து ஓடிவா நிலா ! *இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா!.....*
🍁 *மலர்களைப் போல் தங்கை* உறங்குகிறாள் ! அண்ணன் வாழவைப்பான் என்று *அமைதி கொண்டாள்*
கலைந்திடும் *கனவுகள்* அவள்
படைத்தாள் *அண்ணன் கற்பனைத் தேரினில் பறந்து வந்தாள்!*
🍁 *தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு !*
தெளிவாகத் தெரிந்தாலே *சித்தாந்தம்* அது தெரியாமல் போனாலே *வேதாந்தம்........*
*கல்லிக்கென்ன முள்ளில் வேலி* போடி தங்கச்சி *காட்டுக்கேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி !*.........
*சொந்தம் என்ன பந்தம் என்ன.........* அதில் *நான் என்ன...... அடியே நீ என்ன ஞானப் பெண்ணே !........*
🍁 *புன்னகை மன்னன் பூவிழி கண்ணன்* ருக்குமணிக்காக,
இந்த *பாமா ருக்குமணி* இருவருமே *அவன் ஒருவருக்காக !*
🍁 சொன்னது நீதானா ? *சொல், சொல்,........ என் உயிரே !*
இன்னொரு *கைகளிலே* நான், நான், நானா......
*எனை மறந்தாயா சொல்... சொல்... என் மனமே........*
🍁 *உள்ளம் என்பது ஆமை அதில் உள்ளம் என்பது ஊமை !*
🍁 *அல்லா அல்லா* நீ இல்லாத இடமே இல்லை *நீ தானே அன்பின் எல்லை !*
*உடலுக்கு ஒன்பது வாசல் மனதிற்கு என்பது வாசல் !*
உயிருக்கு *உயிராய்க்* காணும் *ஒரு வாசல் பள்ளிவாசல் !*
🍁 *நீ* பார்த்த பெண்ணை *நான் பார்க்க வில்லை!*
நான் பார்த்த பெண்ணை *நீ பார்க்க வில்லை !*
பெண் ஒன்று கண்டேன்........ *கண் அங்கு இல்லை.* என்னென்று நான் சொல்லலாகுமோ ! *ஏதென்று நான் சொல்லலாகுமோ.....*
🍁 *புத்தம்* புதிய புத்தகமே *உன்னைப் புரட்டிப் பார்க்கும் புலவன் நான் !*
ஏட்டைப் புரட்டி பாட்டை படைக்கும்
*வீட்டுப் புலவன் நாயகன் நான்.*
இது போன்று இதயம் தொட்ட *கவிஞரின் கவிதை வரிகள்*
*இமையத்தை தொட்ட காலம் ! அந்தக் காலம்.*
🕉 "அர்த்தமுள்ள *இந்து மதம் தந்து இந்துக்கள்* நினைவிலும், மனத்திலும் நீங்கா இடம் பிடித்தவன் "
🗼 இன்று *கவியரசு கண்ணதாசனின் பிறந்த நாள்.*
*பறவையைக்* கண்டான் *விமானம்* படைத்தான்,
*எதிரொலி* கேட்டான் *வானொலி* படைத்தான்,
" *எதனைக் கண்டான் ?*"
*மதங்களை படைத்தான் !*
*மனிதன்* மாறிவிட்டான் !
மரத்தில் *ஏறிவிட்டான்!*
இப்படி *விமானத்தில்* பறந்து சென்ற *கவிஞன் திரும்பி வரவே இல்லை !*
🔥 *காலக் கணக்கை முடித்து வைக்கத்தான் கடல் கடந்து சென்றானோ ?*
*முத்தையா* எனும் கண்ணதாசன் *செட்டி நாட்டில் பிறந்து,*
சென்னையில் வாழ்ந்து, *அமெரிக்க* மண்ணில் மறைந்த அவன் !...............
*காலத்தை வென்று, சென்ற காவியக் கவிஞன்.*
*சங்ககாலம்* தொட்டு இன்று வரை *காலம் உணர்ந்த கவிஞனாக,* சித்தனாக, *கவிதைப்* பித்தனாக, *ஞானியாக,* நெற்றிக் கண் கொண்ட முத்தமிழ் புலவனாக,
*முடிசூடிய அரசவைக் கவிஞனாக வாழ்ந்து*
அறிவியலில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்க *வானில் கண்* அயர்ந்து கலந்து விட்டான்.
*நம் தமிழ் மண்ணை மறந்து.*
நெடுங்காலம் *கவிஞரின் புகழ் மங்காது கவிதை மனங்களை விட்டு என்றுமே நீங்காது !..........*
*கவிதை ஏடு* தந்த கவிஞரின் *காலடிச் சுவடு்,*
*நான் !*
*கயிலை* மு.செல்லப்பன்
சென்னை 28
24-06-2018
---------------------------------
*அன்பே சிவம்*

No comments:

Post a Comment