Saturday 17 December 2022

வெற்றியும் தோல்வியும் .

 வெற்றியும் தோல்வியும் .

தோல்விகள் ஏற்படுகிற போது
மனிதன் இந்த இரு நிலைகளைத் தான் எதிர் கொள்கிறான்.
ஒன்று *பாசிட்டிவ் மெக்கானிசம்.*
மற்றொன்று *நெகட்டிவ் மெக்கானிசம்.*
ஒருவர் தோற்றுவிட்ட சமயத்தில்
மனம் விட்டுப் பேசுதல்
ஆழமான இறை நம்பிக்கை
கடுமையான உடற்பயிற்சி
இசை கேட்டல்
புதிதாக ஏதேனும் கற்றுக்கொள்வது
சுற்றுலா பொழுதுபோக்கு என
மனதை இலகுவாக்குவது போன்றவை பாசிட்டிவ் மெக்கானிசம்.
தற்கொலை எண்ணம்
போதைப்பொருள்கள்
தங்களையும் பிறரையும் துன்புறுத்துவது போன்றவை
நெகட்டிவ் மெக்கானிசம்.
தோல்வி என்பதோ வெற்றி என்பதோ
நம் பார்வை சம்பந்தப்பட்டதே ஒழிய அது நிகழ்வு சம்பந்தப்பட்டது அல்ல.
*"அழுகிய ஆப்பிள் என்பது மனிதனுக்குப் பயன் படாத பொருள்*
*ஆனால்*
*அந்த ஆப்பிளை அழுகச் செய்த பாக்டீரியாக்களுக்கு அது தான் உணவு"*
எனவே ஒருவருக்கு தோல்வியாக இருப்பது மற்றொருவருக்கு வெற்றியாக மாறுகிறது.
ஆக
வெற்றியும் தோல்வியும் நம்முடைய கண்ணோட்டத்தைப் பொறுத்ததேயன்றி வேறில்லை.
இது நிகழ்வு சம்பந்தப்பட்டதா.
அல்லது
பார்க்கும் பார்வையின் கோணம் சம்பந்தப்பட்டதா.
என்பதில் தெளிவு இருக்கும் போது வெற்றியும் தோல்வியும் நம்மை எதுவும் செய்யாது.
மேலும்
நம்முடைய வெற்றி பிறரின் தோல்வியில் தான் என்பதால் தான்
வெற்றியின் மீது அமோகமான மோகம் நம்முள் எழுகிறது.
*இது தான் மனதின் தந்திரம்.*
அனைத்துக்கும் ஒரே தீர்வு தன்னை அறிதல் ஒன்றே.

No comments:

Post a Comment