Friday 30 December 2022

பெண்களின் பேராற்றல்.

 பெண்களின் பேராற்றல்.

*"பெண்ணின் பெருந்தக்க யாவுள"* என்னும் *வள்ளுவர்* கருத்து என்றும் போற்றத்தக்கது.
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பார் என்று கூறப்படுகிறது.
நம்மைப் பெற்றவள் ஒரு பெண். நமக்குச் சந்ததியைப் பெற்றுக் கொடுப்பவள் ஒரு பெண், நமக்கு சகோதரியாக நல்ல உறவாக இருப்பவர்கள் பெண்கள். இந்த நிலையில் பெண்களுக்கு உரிய மரியாதை அனைத்து நிலைகளிலும் வழங்கப்பட வேண்டும்.
அவர்கள் முற்காலத்தில் அடிமைத்தனமாக நடத்தப்பட்டிருக்கலாம். ஆனால், ஆணுக்கு நிகராக படிப்பிலும், வேலை வாய்ப்புகளிலும், வந்த பிறகு அவர்களுக்கு என்று ஒரு உயரிய அடையாளம் நிச்சயமாக கொடுக்கப்பட வேண்டும்.
மகளிர் அமைப்புகள் பெண்களிடையே இது சார்ந்து விழிப்புணர்வுக் கூட்டங்களை அடிக்கடி நடத்த வேண்டும். பெண் குழந்தைகளுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்கிற மனப்பாங்கை மாணவர்களிடையே ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும்.
பெற்றோரும் தங்கள் பிள்ளைகளுக்கு அந்த உணர்வை ஊட்ட வேண்டும். பள்ளிப் பாடப் புத்தகங்களிலும் பெண்கள் பாதுகாப்பு சார்ந்த பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டும்.
ஆணாதிக்கம் மிகுந்திருந்த பல்வேறு துறைகளில், சில பெண்கள் துணிச்சலோடு நுழைந்து எத்தனையோ சவால்களைச் வெற்றியோடு சமாளித்து தங்கள் திறமைகளைத் திண்மையுடன் நிரூபித்துள்ளனர்.
இந்த துணிச்சலும், திண்மையும் அனைத்துப் பெண்களிடமும் ஏற்பட வேண்டும். அப்போது தான் மகாகவி பாரதியார் குறிப்பிட்ட *புதுமைப்பெண்களை*
நாம் காணமுடியும்.
1

No comments:

Post a Comment