Wednesday 28 December 2022

வருத்த உணர்ச்சியை தூர எறியுங்கள்.

 வருத்த உணர்ச்சியை தூர எறியுங்கள்.

ஓர் ஆடு கடும் வெயிலில் நிழலும் உணவும் தேடித் திரிந்தது. வழியில் இன்னொரு ஆடு தன்னைப் போலவே பசியில் சோர்ந்து படுத்துக் கிடந்ததைப் பார்த்தது.
இருவருமாக இரை தேடுவோம் என்று பேசிக் கொண்டு புறப்பட்டன.
ஒரு மரத்தில் உண்ணுவதற்கான இலைகள் இருந்தன. ஆனால் எட்டவில்லை. கீழிருந்த கல்லைப் பார்த்த ஆடு அதில் ஏறி எம்பிப் பார்த்தது. அப்போதும் எட்டவில்லை. இன்னொரு ஆடு தன் மீது ஏறி நின்று இலையைச் சாப்பிடச் சொல்லியது. அதன்படி ஒரு ஆடு சாப்பிட்டு முடித்ததும், அது மற்ற ஆடுக்கு தன் முதுகைக் காட்டி உதவியது.
இரு ஆடுகளும் பசி தணிந்து மகிழ்ச்சியடைந்தன.
இந்தக் கதையில் ஆடுகள் வாழ்க்கைக் கல்வித் திறன்களை அற்புதமாகப் பயன்படுத்தியிருப்பதைக் கவனியுங்கள்.
தனக்குப் பசிக்கிறது; உணவும் நிழலும் தேவை என்பது *"தன் தேவையை உணர்ந்த நிலை".*
இன்னொரு ஆடும் தன்னைப் போலவே பசியில் இருக்கிறது என்பதைக் கவனித்தது *"எம்ப்பதி".*
அத்துடன் உறவாட ஆரம்பித்தது *"இண்ட்டர் பர்சனல் ரிலேஷன்ஷிப்."*
இருவருமாக இரை தேடலாம் என்ற கருத்தைப் பகிர்ந்துகொண்டது *"கம்யுனிகேஷன்".*
மரத்தில் இலைகள் எட்டாமல் இருந்தது *"ப்ராப்ளம்."*
அதை அவிழ்க்க முதலில் யோசித்தது *"க்ரிட்டிகல் திங்க்கிங்".*
கல்லையும் பின்னர் ஒருவர் முதுகை மற்றவரும் பயன்படுத்தியது *"க்ரியேட்டிவ் திங்க்கிங்".*
விளைவுதான் *"ப்ராப்ளம் சால்விங்".*
உணவும் நிழலும் கிடைக்காமல் அலைந்ததில் ஏற்பட்ட அழுத்தத்தை லேசாக்கிக் கொள்ளவும், வருத்த உணர்ச்சியைக் கையாளவும் தவறியிருந்தால் இவை எதுவும் சாத்தியமில்லை.
*ஆடுகளை விட எக்ஸ்ட்ராவாக அறிவும் ஆற்றலும் உள்ள நாம் எத்தனை அற்புதமாக வாழமுடியும்!*
*நான் யார் என்று
உணர்வதுதான் முதல் படி.*

No comments:

Post a Comment