Monday 19 December 2022

வாழ்க்கை வசமாகும்.

 வாழ்க்கை வசமாகும்.

1) நன்றி, தயவு செய்து என்ற சொற்களைத் தேவையான இடங்களில் தயக்கமில்லாமல் சொல்லுங்கள்.
2) முதியவர்கள் நம்மைக் காண வந்தால் எழுந்து நின்று வரவேற்பது சிறப்பு.
3) ஏதாவது கடன் வாங்கியிருந்தால் குறித்த நேரத்தில் திருப்பிக் கொடுத்து விடுங்கள்.
4) மற்றவர் மனம் புண்படும்படி கிண்டலாக எப்போதும் பேசாதீர்கள்.
5) நம்மை சுற்றி இருப்பவர்களின் பெயர்களை தெரிந்து கொள்ளுங்கள்.
6) மற்றவர் அறைக்குள் நுழைவதற்கு முன் கதவை தட்டிவிட்டு, அனுமதி பெற்றுச் செல்லுங்கள்.
7) யாராவது பேசிக் கொண்டிருக்கும் போது, உங்களுக்கு பிடிக்கிறதோ, பிடிக்கலையோ குறுக்கிடாதீர்கள். அவர் பேசி முடித்தவுடன், உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.
😎 நேரம் தவறாமையைக் கடைப்பிடியுங்கள்.
9) ஏதாவது மறுத்துச் சொல்ல வேண்டி இருந்தால், எதிராளி மனம் புண்படாமல் சொல்லப் பழகுங்கள்.
10) இதை இப்படி செய்யலாம்,அப்படி
செய்யலாம் என்று அவர்கள் கேட்டால் மட்டும் சொல்லுங்கள்.
11) தொழில் குறித்து, சொந்த
விஷயங்கள் குறித்து பொது இடங்களில் விவாதிக்காதீர்கள்.
12) ஏதாவது நியாயமாக திட்டுவதாக இருந்தால் தனியாக திட்டுங்கள்.
பொது இடத்தில் வேண்டாம்.
13) தேவையான இடங்களில் மன்னிப்பு கேட்கவோ, தவறை ஒத்துக் கொள்ளவோ, தெரியவில்லை என்று சொல்வதற்கோ தயக்கம் காட்டாதீர்கள்.
14) யார் செய்தது தவறு, யார் செய்தது சரிஎன்று கவலைப்படுவதை விட, எது சரி என்று கவனியுங்கள்.
முடிவு எடுங்கள்.
15) யாராவது நமக்கு உதவி செய்தால் முழு மனதோடு நன்றி சொல்லுங்கள்.
16) குடும்பத்தோடு சந்தோஷமாய் இருக்க நேரம் ஒதுக்குங்கள்.
உங்கள் சொற்களாலும், செயல்களாலும் அவர்களை எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்று வெளிப்படுத்துங்கள்.
17) எதையும் அவசரப்பட்டு முடிவு எடுக்காதீர்கள். நன்கு யோசித்து முடிவெடுங்கள்.
18) சக மனிதர்களை மனிதநேயத்தோடு நேசியுங்கள்.உதவ முடிந்த இடங்களில்
மனப்பூர்வமாக உதவுங்கள்.

No comments:

Post a Comment