Wednesday 14 December 2022

கவலையைத் தூக்கி எறியுங்கள்.

 கவலையைத் தூக்கி எறியுங்கள்.

நல்வாழ்வு என்பது உலக
வாழ்விலும் இல்லை.
இயற்கையிலும் இல்லை.
அவரவர் நடந்து கொள்ளும்
முறையில்தான் இருக்கிறது.
சூழ்நிலைகள் வெற்றியை தீர்மானிப்பதில்லை
அதை நீ எதிர்கொள்ளும் விதம் தான் உன் வெற்றியைத் தீர்மானிக்கும்.
இன்று கை கொடுக்க யாரும் இல்லை என்று கலங்காதே
நாளை கைதட்ட உலகமே காத்திருக்கும்
நீ முயற்சி செய்தால்.
எத்தனை அழகான விளக்கு என்றாலும் பகலில் எரிந்தால் வீண்தான்.
எத்தனை ஆழமான அன்பு என்றாலும் தவறான இடத்தில் காட்டினால் வீண்தான்.
எத்தனை ஒப்பனைகள் இருந்தாலும் புன்னகையைத் தவிர வேறு எதுவும்
அழகாய் காட்டிவிட போவதில்லை
ஏமாற்றுவோருக்கு
மறதி‌ அதிகம்.
நேசித்தவர்களுக்கு
நினைவுகள் அதிகம்.
நல்லா குடும்பம் நடத்த ரெண்டேவழிதான்.
உன்னால எவளோ அன்பா இருக்க முடியமோ எவளோ விட்டு குடுக்க முடியுமோ இரு. அதுக்குச் சரியா வரலைனா உன்னால எந்த அளவுக்கு திமிரா இருக்க முடியுமோ இருந்துட்டு உன் வாழ்க்கைய சந்தோஷம வாழ்ந்துட்டு போயிட்டே இரு.
உங்களால் உங்களையே
அணைத்துக் கொள்ள முடியாது
உங்கள் தோள் மேல் சாய்ந்து
உங்களால் அழ முடியாது .
வாழ்க்கை என்பது
ஒருவருக்காக ஒருவர் வாழ்வது
அதனால் உங்களுக்கு
பிடித்தவர்களுடன் வாழ்க்கையை
சந்தோஷமாக வாழுங்கள்.
பாதைகளில் தடைகள் இருந்தால் அதை தகர்த்து விட்டுத்தான் செல்ல வேண்டும் என்றில்லை. தவிர்த்து விட்டும் செல்லலாம்
எறும்பைப் போல.
எந்தச் செயலையும் யாரையும் எதிர்பார்க்காமல், நீங்களே எதிர்கொள்ளுங்கள். உங்களிடம் இருக்கும் திறமை யாரிடமும் ஒப்பிட முடியாத ஆற்றல் படைத்தது.
நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத்து அவலம் இலர்.
#உரை1072 எப்போதும் நல்லவை பற்றியே சிந்தித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பவர்களைவிட எதைப் பற்றியும் கவலைப்படாமலிருக்கும் கயவர்கள் ஒரு வகையில் பாக்கியசாலிகள்தான்
பாதைகள் மாறும் போது வாழ்க்கையில் பாடமும் நம்மோடு பாதையாகிறது.
பிரம்மனின் எழுத்தில் பிழையென்பதில்லை, ஆனால் பிழையை நாம் தான் வலிமையாக்குகின்றோம்.
நான் கண்ணாடி மாதிரி.நீங்கள் எதை பிரதிபலிக்கிறீர்களோ அதையே நானும் பிரதிபலிப்பேன்.
உன்னை இழிவாகப் பேசுகிறவர்கள்
உன்னை இழிவாக நினைப்பவர்கள் பற்றி நீ எந்த கவலையும் கொள்ளாதே.
அவர்கள் உன் பாதையில் வரும் முற்களைப் போல தூக்கி எறிந்து விட்டு சென்று கொண்டே இரு.
கடவுள் உன்னோடு இருக்கிறார் .
கடவுளைபற்றியாரும்உணராத நிலையில்,ஆசையை,ஒழுக்கத்தை,
பண்பை கட்டுப்பாட்டிற்குள் வைத்து தன்னிறைவு கற்காத வரையில்,ஒவ்வொரு ஆசிரமமாகச் சென்றால்
பணம்,
,சொத்துதான் வீண் விரயமாகும்.அமைதி,நிம்மதி, மனநிறைவு கிடைக்கவே கிடைக்காது.அவர்களின் சொற்பொழிவை,சத்சங்கம் மட்டும்கேட்டு,தியானம் செய்தாலேபோதும்.

No comments:

Post a Comment