Monday 26 December 2022

உழைப்பே உயர்வு.

 உழைப்பே உயர்வு.

பெரிய சவால்களை எதிர்கொள்ள மிகுந்த தைரியமும், திறமையும் வேண்டும்.எளிய செயல்கள் அரிய பலன்களைத் தருகின்றன.
அரிய செயல்கள் சாதனைகளாக மலர்கின்றன. அதனால் அவற்றுக்கு என்றுமே மதிப்பு அதிகம்.
போராசியர் ஒருவர் மூன்று கேள்விகளை மாணவர்களிடம் கொடுத்துப் பதில் எழுதித் தரச் சொன்னார். அதில் மிகவும் கடினமான கேள்விகளுக்கு 100 மதிப்பெண்களும், கொஞ்சம் கடினமான கேள்விகளுக்கு 60 மதிப்பெண்ணும் தந்து இருந்தார்.
தேர்வு முடிந்ததும் மாணவர்களின்
விடைத்தாள்களின் விடைகளைப் பார்க்காமல் மிகவும் கடினமான கேள்விகளைத் தேர்வு செய்தவர்களுக்கு முதல் நிலையும், அடுத்தவர்களுக்கு முறையே இரண்டாம், மூன்றாம் நிலையும் தந்தார்.
மாணவர்களோ, "பதில்களைப் பார்க்காமல் மதிப்பெண் தருகிறீர்களே" என்று கேட்க, பேராசிரியரோ" உங்கள் பதிலுக்காக நான் இந்தத் தேர்வை வைக்கவில்லை.
உங்கள் இலக்கு என்ன என்று அறியவே இந்தத் தேர்வை வைத்தேன். கடினப்பட்டு உழைப்பவர்களே அனைத்திலும் முதல்நிலை அடைவார்கள்" என்று உங்களுக்கு உணர்த்தவே இந்தத் தேர்வு என்று சொல்லி முடித்தார்.
*விடாமுயற்சியுடன், சலியாத உழைப்பும் இருந்தால் மிகவும் கடினமான செயல்களை எளிதில் வெல்லலாம்.*

No comments:

Post a Comment