Wednesday 7 December 2022

நேர்மையாளர்களின் முகவரி.

 நேர்மையாளர்களின் முகவரி.

• முதலில், உங்களுக்கு ஒரு மன நிம்மதி கிடைக்கும்
• நீங்கள் பேசுகின்ற வார்த்தைகளுக்கு ஒரு மரியாதை கிடைக்கும்
நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் / அலுவலகத்தில் உங்கள் மீது மரியாதை கூடும்
• உங்களின் நேர்மை கண்டு, உங்கள் பெற்றோர் பெருமிதம் கொள்வர்
• உங்கள் நேர்மையை, நிச்சயம் உங்கள் துணை பாராட்டுவார்
• உங்கள் நண்பர்களால், நேர்மையின் காரணமாக,
நீங்கள் மதிக்கப்படுவீர்கள்
• உங்களைச் சுற்றியுள்ள உறவுகள், உங்களின் நேர்மையான குணத்துக்கு / செயல்களுக்கு தனியாக ஒரு மரியாதை தருவார்கள்
• உங்கள் பிள்ளைகளிடத்தில், உங்கள் மீது, உங்கள் நேர்மையின் மீது, நீங்கள் செய்கின்ற நேர்மையான செயல்கள் மீது ஒரு மரியாதை தானாகவே ஏற்படும்
• உங்கள் நேர்மையான செயல்பாடுகளினால், நீங்கள் யாருக்கும் பயந்து வாழ வேண்டிய அவசியமில்லை
• சுருக்கமாக சமூகத்தில் உங்களின் நேர்மையான செயலுக்கு ஒரு மரியாதை என்றும் கிடைக்கும்.
• நீங்கள் நேர்மையாக இருந்தால்
கண்டிப்பாக பொருளாதாரத்தில் சிறிது
பின்தங்கித் தான் இருப்பீர்கள்.
இதைவிட
வாழ்க்கையில் வேறு
என்ன வேண்டும் உங்களுக்கு.
தொடரட்டும் நேர்மையின் நெடும் பயணம்.

No comments:

Post a Comment