Thursday 8 December 2022

சிறப்பின் சிறப்பு.

 சிறப்பின் சிறப்பு.

வான்குருவி எனப்படும் தூக்கணாங் குருவிக்கூடு, அரக்கு எனப்படும் வலிமையான இயற்கைப் பசை கொண்டு தேனீ உருவாக்கும் தேன்அடை, சிந்தனைச் சிக்கலை நம்முள் உருவாக்கிவிடும் சிலந்தி வலை இவற்றை மேலோட்டமாகப் பார்த்தால் சாதாரணமாக தான் தெரியும். ஆனால் இந்த அறிவியல் உலகில் எந்த மேதையாலும் இவற்றை உருவாக்க இயலுமா.
ஒவ்வொருவரிடமும்
ஒரு சிறப்பு இருக்கிறது;
சாதாரண பறவையான வான்குருவி கட்டுகின்ற (தூக்கணாங் குருவிக்) கூட்டை இந்தக் கணினி யுகத்தில் வேறு எவராலும் கட்டித் தொங்கவிட்டு அதில் அக்குருவிகளைக் குடி வைக்க முடியுமா முடியவே முடியாது.
அதாவது இந்த உலகத்தில் ஆறறிவு படைத்த மனிதர்களாலும் செய்ய முடியாத செயல்களும் இருக்கவே செய்கின்றன என்பதை இடித்துக் காட்டி, வாழ்வில் பிற மனிதர்களிடத்தும்,
பிற உயிர்களிடத்தும் நாம் சமத்துவ உணர்வு கொண்டிருக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுவதே இப்பாடலின் நோக்கம்.
*‘யாம் பெரிய வல்லாளன்’* என்பதாய் எண்ணம் கொண்டு பிறரைத் தாழ்மையாக நினைத்து விடக் கூடாது’ என்ற எச்சரிக்கையை இப்பாடல் மூலம் நமக்கு அளிக்கிறார் ஔவையார்.
*வான் குருவியின் கூடு வல் அரக்கு தொல் கரையான்*
*தேன் சிலம்பி யாவர்க்கும் செய் அரிதால் - யாம் பெரிதும்*
*வல்லோமே என்று வலிமை சொல வேண்டாம் காண் !*
*எல்லார்க்கும் ஒவ்வொன்று எளிது !*

No comments:

Post a Comment