Saturday 24 December 2022

நற்செயல்களின் மூலாதாரம்.

நற்செயல்களின் மூலாதாரம்.
உலகம் முழுமைக்கும் ஆக்க சக்திகளாக இருப்பவற்றை பாசிட்டிவ் எனர்ஜி என்கிறோம். *’நீங்க நல்லா இருக்கணும், வாழ்க வளமுடன்’ போன்ற வாழ்த்துச் சொற்கள் பலவும் பாசிட்டிவ் எனர்ஜியைச் சேர்ந்தவை.*
*வங்கி வாசலில் பேனா இல்லாமல் தவிக்கும்போது பேனா கொடுத்து உதவியவரிடம் புன்முறுவலுடன் நன்றி எனச் சொல்வது,*
*சாலையில் நடப்பட்ட மரத்திற்கு ஒருவாளித் தண்ணீர் ஊற்றுவது போன்ற பலவும் பாசிட்டிவ் எனர்ஜியை வெளிப்படுத்தும் செயல்கள்தான்*.
*நற்செயல்களின் மூலாதாரம், பாசிட்டிவ் எனர்ஜி. அது ஒன்றின் வளர்ச்சியைக் கூட்டும். அவ்வளர்ச்சியைப் பாதுகாக்கும்.*
பாசிட்டிவ் எனர்ஜியின் *பகையாளிதான் நெகட்டிவ் எனர்ஜி.* ’அவன் அழியணும், அந்தக் குடும்பம் அழியணும், அவன் வீட்டு மாடு சாகணும், விவசாயம் பொய்க்கணும், பிசினஸ் நொடிக்கணும்’ போன்ற வசவு உணர்வுகள் நெகட்டிவ் எனர்ஜியைச் சேர்ந்தது. *ஒன்றின் அழிவை, ஒருவரின் துயரத்தை நேசிக்கக்கூடியது*. தீய நிகழ்வுகளின் தூண்டுகோலாக இருப்பது நெகட்டிவ் எனர்ஜி.
*இத்தகைய இரண்டு எனர்ஜிகளின் பிறப்பிடம், வாழ்விடம் எது?*
*மனிதனின் சிந்தனை அறைதான்*
*இரு சக்திகளும் "மனிதனின் சிந்தனை" என்ற ஒரே அறையில்தான் வித்தாகப் பிறக்கின்றன.*
அதில் எந்த விதை செடியாகும், எந்த விதை மரமாகும் என்பது அம்மனிதனுக்குக் கிடைக்கிற சூழ்நிலையே முதலில் முடிவு செய்கிறது.
*மனிதர்கள் தங்களுக்குள் எழுப்பிக்கொள்ளும் எனர்ஜிகளில் ஒவ்வொரு நாளும் எந்தச் சக்தியின் ஆதிக்கம் அதிகரிக்கிறதோ, அதற்கான விளைவுகளை அவர் சார்ந்துள்ள சமூகமும், இந்த உலகமும் சந்திக்கிறது*
*சூழ்நிலை தான் ஒரு மனிதனுக்குச் சிந்தனைத் தருகிறது.
அச்சிந்தனையே அவனிடமிருந்து சொல்லாக வெளிவருகிறது. அச்சொல்லே அவனது செயலாகிறது. தொடர்ச்சியான செயலே பண்பாகிறது.*
*அப்பண்பே அம்மனிதன் மரபணுவில் பதிவு பெறுகிறது.
அடுத்த சந்ததிக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது. எனவே வாழும் வீட்டில் சமூகத்தில்,நாட்டில் பாசிட்டிவ் எனர்ஜியைப் பரவ விடுங்கள்.

அதை உருவாக்குங்கள். உங்களுக்கும் சமூகம் பாசிட்டிவ் எனர்ஜியையே திரும்ப வழங்கும்.* 

No comments:

Post a Comment