Friday 23 February 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

போற்றுதலுக்குரியவர்.....
அமேரிக்க பள்ளி் துப்பாக்கி சூட்டில் மாணவ மாணவிகளை காப்பாற்றிய இந்திய ஆசிரியை...குவியும் பாராட்டு...
அமேரிக்காவின் புளோரிடா மாகாணம்,பார்க்லேண்ட் நகர் மெர்ஜாரி ஸ்டோன்மேன் டக்ளஸ் உயர்நிலைப் பள்ளியில் கடந்த 14 ந்தேதி மதியம் துப்பாக்கியுடன் நுழைந்த முன்னாள் மாணவன்(19வயது) கண்மூடித்தனமாக சுட்டதில் 17 பேர் உயிர்ழந்தனர்.
இந்தப் பள்ளியில் இந்தியாவை சேர்ந்த சாந்தி விஸ்வநாதன் என்பவர் கணித ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது இரண்டாவது முறை எச்சரிக்கை மணி ஒலித்த உடன் ஏதோ விபரீதம் நடக்கிறது என்பதை புரிந்து கொண்ட ஆசிரியை சாந்திவிஸ்வநாதன் உடனடியாக தனது வகுப்பு அறை கதவையும்,ஜன்னல்களையும் பூட்டி விட்டு,ஜன்னல் கண்ணாடிகளை பேப்பர் கொண்டு மறைத்து விட்டு மாணவ மாணவிகளை தரையில் படுக்க வைத்துள்ளார்.
இதை தொடர்ந்து அதிரடி படை போலீஸ்சார் வந்து கதவை தடடிய போது,சாந்தி விஸ்வநாதன் பயங்கவாதிகள்தான் போலீஸ் போல பேசி கதவை தட்டுவதாக கருதி முடிந்தால் கதவை உடைத்து பாருங்கள் நான் கதவைத் திறக்கமாட்டேன் என்று கூறியுள்ளார்.பின் சக வகுப்பு ஆசிரியர்கள் பேசி திறந்துள்ளார்.
எச்சரிக்கை மணி இரணடு முறை ஒலித்தவுடனேயே விபரீதத்தை புரிந்து கொண்டு,புத்திசாலிதனத்துடனும் துணிச்சலுடனும் உடனே செயல்பட்டு தனது வகுப்பு மாணவ மாணவிகளை காப்பாற்றிய ஆசிரியை சாந்தி விஸ்வநாதனை மாணவ,மாணவிகளி்ன் பெற்றோர் மனம் திறந்து பாராட்டி உள்ளனர்.மேலும் சன்சென்டினல் உள்ளிட்ட பத்திரிக்கைகளும் சாந்தி விஸ்வநாதன் தொடர்பான செய்தியை வெளியிட்டு பாராட்டு தெரிவித்துள்ளன.
....................
இது போன்ற சம்பவங்கள் அமேரிக்க பள்ளிகளில் அடிக்கடி நடப்பதால்,அமேரிக்க அதிபர் டிரம்ப்,அமேரிக்க பள்ளி ஆசிரியர்களுக்குத் துப்பாக்கி அளிக்கும் திட்டத்தை ஆதரிப்பதாக தெரிவித்ததோடு, ஆசிரியர்கள் அதற்கான முறையான பயிற்ச்சி பெறுவது அவசியம் என்றும் நேற்று தெரிவித்துள்ளார்.
நன்றி ராஜப்பா தஞ்சை

No comments:

Post a Comment