Saturday 24 February 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

நாம் நம்மை எப்படி வெளிப்படுத்துகிறோமோ, அப்படியே இந்த சமுதாயம் பிரதிபலிக்கிறது என்பதை உணர்ந்தாலே மகிழ்ச்சியுடன் சாதித்து வாழ முடியும்.
வேட்டையாடப்போன மன்னர் ஒருவர் தனது பரிவாரங்களுடன் திரும்பிக்கொண்டிருந்தார். வழியில் ஒரு சிறிய ஊர். மன்னர் மெய்க்காப்பாளரை அழைத்தார்.
இந்த ஊருக்குள் போவோம், நம்மை யாராவது அடையாளம் கண்டு கொள்கிறார்களா…? என்று பார்ப்போம்” என்றார்.
மெய்க்காப்பாளர் முன்னே சென்றார். மன்னன் பின்னே சென்றார். எதிரே வந்த மக்கள் யாரும் மன்னனை கண்டு கொள்ளவே இல்லை. ஆனால், மெய்க்காப்பாளரைப் பார்த்து எல்லோரும் புன்னகைத்தார்கள்.
மன்னருக்கு கோபம். “இங்கு யாருக்குமே என்னைத் தெரியவில்லை. அனால், உன்னை எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது” என்றார்.
உடனே மெய்க்காப்பாளர் “மன்னா என்னையும், அவர்களுக்குத் தெரியாது” என்றார்.
தெரியாது என்றால் உன்னைப் பார்த்து ஊர் மக்கள் ஏன் புன்னகைக்க வேண்டும் என்று மன்னர் கேட்டார்.
மெய்க்காப்பாளர் சொன்னார், “ஏனென்றால் நான் அவர்களைப் பார்த்து புன்னகைத்தேன்” என்று…
நாம் நம்மை எப்படி வெளிப்படுத்துகிறோமோ, அப்படியே இந்த சமுதாயம் பிரதிபலிக்கிறது என்பதை உணர்ந்தாலே மகிழ்ச்சியுடன் சாதித்து வாழ முடியும்.
ஆம் நண்பர்களே *நம் வாழக்கை எப்படி இருக்க வேண்டும் என்று முடிவு பண்ண வேண்டியது நாம மட்டும் தான்* ....

No comments:

Post a Comment