Monday 26 February 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🕋 வெற்றியாளர்கள் முடிவுகளை விரைவில் எடுக்கிறார்கள்; அப்படி எடுத்த முடிவுகளை மிக மெதுவாகவே மாற்றுகிறார்கள். தோல்வியுறுபவர்கள், முடிவுகளை மிக மெதுவாக எடுக்கிறார்கள்; அப்படி எடுத்த முடிவுகளை அடிக்கடியும், மிக விரைவாகவும் மாற்றுகிறார்கள்.
🕋 தேவைகள் என்றுமே தீர்ந்து போவதில்லை, போதும் என நாம் நினைக்காத வரை.
🕋 அடுத்தவர்களுக்கு நம்மை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை உணரும் பொழுது ஒரு வித நிம்மதி நம்மை வந்து சேர்கின்றது.
🕋 பெற்றோரின் கருத்தை முழுவதுமாக ஏற்றுக் கொண்ட பிள்ளைகள் சுயமாக சிந்திக்கத் தொடங்குவதை "எதிர்த்து பேசுதல்" என்று முத்திரை குத்தி விடுகிறோம்.
🕋 ஒருத்தர் பிரச்சனையைப் புரிஞ்சிக்கனும்னா அவங்க இடத்திலருந்து பாக்கனும்.
எல்லாம் நன்மைக்கே
நல்லதே நடக்கும்
நன்றி அரு. சொக்கலிங்கம்

No comments:

Post a Comment