Thursday 22 February 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

எங்கே போகிறோம்...?
================
ஒரு காலத்தில் பத்திரிகையாளன் என்றால் ஒரு சமூக அந்தஸ்து இருந்தது. பத்திரிகையாளன் என்று சொல்லிக் கொள்வதில் ஒரு கர்வம் இருந்தது. ஆனால் இன்றைக்கு எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. அதற்கு காரணம்
பெருகிவிட்ட சேனல்கள்....
ஒவ்வொரு சேனலுக்கும் 24 மணி நேர புட்டேஜ் தேவைப்படுகிறது. இதனால் செய்தியாளர்களும், பணியாளர்களும் துரத்தப்படுகிறார்கள்.
ரஜினி வீட்டு வாசலில்,
கமல் வீட்டு வாசலில், அரசியல்வாதிகள் வீட்டு வாசலில் காத்துகிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
அவர்கள் எப்போது வீட்டை விட்டு வெளியில் வருவார்கள் என்று தெரியாத நிலையில் வீட்டுமுன் காத்துக் கிடப்பதெல்லாம் கொடுமையிலும் கொடுமை.
விமான நிலையமா,
கல்யாண வீடா, சாவு வீடா, எங்கென்றாலும் மைக்கை நீட்டி கருத்து கேட்கிற ஒரு நிலை உருவாகி இருக்கிறது.
ஒவ்வொரு பத்திரிகையாளர் சந்திப்பும் ஒரு மாநாடு போல நடக்கிறது.
செல்போனும், இண்டர்நெட் பயன்பாடும் அதிகரித்து விட்ட நிலையில் ஆண்ட்ராய்டு போன் வைத்திருக்கிற ஒவ்வொரும் பேஸ்புக் நிருபர்களாக, போட்டோகிராபர்களாக மாறிவிட்டார்கள்.
1500 ரூபாய் செலவில் ஒரு இணையதள பக்கத்தை தொடங்கி பத்திரிகையாளராகி விடுகிறார்கள்.
எதையாவது படம் எடுத்து அதை அப்லோட் செய்து நிறைய லைக்குகளை குவிக்க வேண்டும், தனி கவனம் பெற வேண்டும் என்கிற ஆசை,
சாலை விபத்தில் உயிருக்கு போராடுகிறவனை காப்பாற்றுவதை விட அதை செல்போனில் படம் எடுக்கிற மோசமான மனோநிலையாக மாறி இருக்கிறது.
"ஏம்பா பத்திரிகைகாரங்கல்லாம் கொஞ்சம் சத்தம்போடாம இருங்கப்பா"
"தயவு செய்து பத்திரிக்கையாளர்கள் ஓரமாக நிற்கும்படி கேட்டுக் கொள்கிறோம்"
"பத்திரிகையாளர்கள் அமைதியாக இருந்தால்தான் நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்த முடியும்"
"போட்டோ கிராபர் உட்காரு உட்காரு..."
"கேமராமேன் வழியை மறித்து நிக்காதீங்க ஓரமா நில்லுங்க"
"தயவு செய்து பத்திரிகைகாரங்க சாப்பாட்டு டோக்கன் வாங்கிட்டு வரிசையா வாங்க"
எத்தனை பேருக்கு எத்தனை தடவ கவர் தர்ரது?
எட்டு பேப்பர் ஏழு சேனல்தான் இருக்கு அம்பத்தி அஞ்சு பேர்னு சொல்றீங்க?
என்பது மாதிரியான கமெண்டுகளை எல்லா நிகழ்ச்சியிலும் கேட்க முடிகிறது.
சாலையில் செல்லும்போது பத்து வாகனங்களில் 3 வாகனத்திலாவது 'பிரஸ்' ஸ்டிக்கரை பார்க்க முடிகிறது.
கல்யாண பத்திரிக்கை அடிக்கிற அச்சக பணியாளர்கள் முதல் பேப்பர் போடுகிற சைக்கிள் பாய் வரை 'பிரஸ்' ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறார்கள்.
சமூக விரோத வேலைகளை செய்கிறவர்கள் முதல், தாதாக்கள் வரை பத்திரிகையாளர் முகமூடி அணிந்திருக்கிறார்கள்.
500 ரூபாய் செலவு செய்தால் பத்திரிகையாளர் அடையாள அட்டை பெற்றுவிட முடியும் என்கிற மிக மோசமான நிலை உருவாகி இருக்கிறது.
அகில உலக பத்திரிக்கையாளர்கள் சங்கம் முதல் அனகாபுத்தூர் பத்திரிகையாளர்கள் சங்கம் வரை சங்கங்கள் பெருகிக் கிடக்கின்றன.
பத்திரிகை பணியை ஆத்மார்த்தமாக நேசித்து வந்தவர்கள் இருக்கிறார்கள்,
இந்த பணியில்தான் சேர வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டு அதற்காக படித்துக் கொண்டும், முயற்சித்துக் கொண்டும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இருக்கிறார்கள்.
களைகள் பெருகிவிட்ட நிலையில் நல்ல பயிர்கள் எப்படி தங்களை வளர்த்தெடுக்கப்போகின்றன என்று தெரியவில்லை.
செய்தி சேனல்களும், பத்திரிகையாளர்களும் பெருகி கொண்டிருக்கும் நேரத்தில் இன்னும் 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த துறை எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை.
எங்கே சென்று கொண்டிருக்கிறோம் நாம்...?
விடை தெரியவில்லை! சமூக அக்கரையில் ஒரு பத்திரிகையாளர்

No comments:

Post a Comment