Wednesday 28 February 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*மன அழுத்தத்தில் இருந்து தப்பிக்கும் வழிகள்*
இன்று பலரும், குறிப்பாக இளைய தலைமுறையினர் மனஅழுத்தச் சிறையில் அதிகம் சிக்கித் தவிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
அதற்கு, இன்று அதிகரித்து வரும் நகர மயச் சூழல் ஒரு முக்கியக் காரணம். இன்று நம் மீது அதிகம் சூரிய ஒளி படுவதில்லை, சுத்தமான காற்றை அதிகம் சுவாசிப்பதில்லை, கண்கள் குளிர பசுமைச் சூழலை பார்ப்பதில்லை.
இவையெல்லாம் நம் மூளையில் எதிர் மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எழில் கொஞ்சும் இயற்கை, மூளைக்கு இதம் அளிக்கிறது என்றால், கச கசப்பும் பர பரப்பும் நிறைந்த நகரச் சூழல், மூளைக்கு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
இன்று இந்தியாவில் 40 சதவீதம் பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப் பட்டிருக்கின்றனர் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மன அழுத்தம் தான், அதிகரித்து வரும் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள், பட படப்பு, தற்கொலை உணர்வு போன்ற பல்வேறு தீமைகளுக்கு மூலவேர் என்பதை நாம் உணர வேண்டும்.
சரி, மனஅழுத்தத்தில் இருந்து எப்படித் தப்பிக்கலாம்?
நிபுணர்கள் கூறும் சில ஆலோசனைகள் இதோ...
*ஆரோக்கியமான, சரியான அளவு உணவு, மூளைச் செயல் பாட்டை ஊக்குவித்து, மன அழுத்தத்தைக் குறைக்கிறது.* சுத்திகரிக்கப் பட்ட சர்க்கரை, பதப் படுத்திய உணவு போன்றவற்றைத் தவிர்த்து, காய்கறிகள், பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும். இறைச்சி புரதத்தைக் குறைக்க வேண்டும். புளிக்க வைத்த தயிர் போன்ற உணவுகள் செரிமானத்துக்கும், மூளைக்கும் நல்லது.
* தினந் தோறும் இரவு 7 முதல் 9 மணி நேரம் உறங்குவது மன அழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது, மன நிலையை மேம் படுத்துகிறது.
* தினமும் குறைந்த பட்சம் அரை மணி நேரம் ஏதாவது உடல் உழைப்பு சார்ந்த விஷயத்தில் ஈடு படுவது, மன அழுத்தத்தைத் துரத்துகிறது, உடலெங்கும் உற்சாகத்தைப் பரப்புகிறது. யோகாசனம், பிராணாயாமம் போன்றவையும் நன்கு பலன் தரும்.
* மன அழுத்தம், மன நெருக்கடியைக் குறைப்பதில் தியானத்தின் பங்கை பல ஆய்வுகள் தற்போது நிரூபித்திருக்கின்றன. 10 முதல் 15 நிமிடங்கள் தியானம் செய்தாலே, மன அழுத்தம் ஏற்படுத்தும் ஹார்மோன் சுரப்பு கட்டுப் படுகிறது, ரத்த அழுத்தமும், இதயத் துடிப்பும் மிதமாகிறது, மூளையின் நலத்துக்கு உதவுகிறது.
நல்லதே நடக்கும்
எல்லாம் நன்மைக்கே

No comments:

Post a Comment