Tuesday 20 February 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🙇 விழுந்து விடாதே எனக் குழந்தைகளை வளர்க்கும் நாம் வீழ்ந்தால் எழு என சொல்லிக் கொடுப்பதில்லை. இதன் காரணமாகவே பிற்காலத்தில் அவர்கள் மன உறுதியை இழந்து தோல்வியைக் கண்டு அஞ்சுகிறார்கள். மீண்டும் எழும் தைரியம் வருவதில்லை. தோல்வியை அவமானமாகக் கருதி எதிர்மறை எண்ணங்களில் உழல்கின்றனர்.
🙇 புரிந்த ஒன்றை புரியவில்லை என்று சொல்ல வேண்டும். புரியாதா ஒன்றை புரிந்து கொண்டு இருப்பதாக சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். இப்படி செய்பவரை புத்திசாலி என்கிறது உலகம்.
🙇 ஒரு வேலையை வேகமாக செய்றது முக்கியம் இல்லை. சரியா செய்றது தான் முக்கியம்.
🙇 வயதானவர்கள் நம்மிடம் ஏதேனும் கூறினால் காது கொடுத்துக் கேளுங்கள், அவர்களுக்கு அதை விட பெரிய சந்தோஷம் ஏதும் இருக்க முடியாது.
🙇 அதிகாரத்தினால் சாதிப்பது கடினம். அன்பினால் சாதிப்பது சுலபம்.
எல்லாம் நன்மைக்கே
நல்லதே நடக்கும்
நன்றி அரு. சொக்கலிங்கம்

No comments:

Post a Comment