Monday 19 February 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

செம்மொழித் தமிழர் உ வே சா....
தமிழ்தாத்தாவின் சிலேடைப்பேச்சு
சேதுபதி மன்னரைபார்ப்பதற்காக, அவரது மாளிகை நோக்கிப் போனார் தமிழ்தாத்தா உ.வே.சா. அவர்கள்.மன்னரின் வரவேற்பு
அறையில் வருபவர்கள் அமர தனித்தனி இருக்கைகள் இருந்தது.உ.வே.சா.அமர்ந்து நேரமாகிவிட்டது.இதை அறிந்து பதறி, தமிழறிஞர் ஒருவரை காக்க வைத்துவிட்டோமே என்றுவருந்தி, வேகமாக வந்த மன்னர் உ.வே.சாவுடன் ஒரேஇருக்கையில் அமர்ந்து வணக்கம் என்றார் அய்யர் அவர்கள் மகிழ்ந்து 'சமஸ்தான அதிபரே' எனக்கு
'சம ஸ்தானம் 'தந்தமைக்கு மகிழ்ச்சி என்றார்.மன்னர் சிரித்தார்.பேசிக்கொண்டு இருந்த மன்னர், நேரத்தை பார்த்தவுடன், உ.வே.சா. மன்னரை பார்த்து
'போதுமானது;எனவே போதுமானது 'என்றார்.இதன் பொருள் என்னவென்றால், எனக்கு தந்த நேரம் போதுமானது.
மேலும் இன்றைய பொழுதும் ஆனது என்ற பொருளாகும்.
சிலேடையின் பொருளைப்புரிந்த மன்னரும் சிரித்துக்கொண்டே விடை பெற்றார்.உ.வே.சா.என்ற மனிதர் தமிமுக்குச்செய்த
தொண்டும், அவர் தேடித்தந்த தமிழ் இலக்கிய ஓலைச் சுவடிகளும் தமிழ்மொழிக்கு கிடைத்த புதையல்கள் என்பதை தமிழர்கள் என்றும் நெஞ்சில் வைத்து அத்திருமகனாரை போற்றிப்பணிதல் அவசியமாகும்.
தகவல்தந்தோன்
கவிஞர் அரிமழம் ப.செல்லப்பா
9791033913
aamchennai@gmail.com

No comments:

Post a Comment