Saturday 30 December 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

ஒரு நதியின் இரண்டு கரைகளும் தனித்தனியே பிரிக்கப்பட்டுஅவற்றிற்கு இடையே அந்த நதியானது ஓடுவதை போலத்தான் நமக்கு தோன்றுகிறது.
*************************************************************************
ஆனால், உண்மையில் சொல்லப் போனால்
அந்த நதியின் அடியாழத்தில் இரண்டு கரைகளுமே எந்த இடைவெளியும் இல்லாமல் ஒன்றுடன் \
ஒன்று இணைக்கப் பட்டிருக்கின்றன.
நதியின் மேற்புறத்தில் வேண்டுமானால் இரண்டு கரைகள் தனித்தனியாக பிரிக்கப் பட்டிருப்பதைப்\ போல தோன்றலாம்.
ஆனால், அந்த இரண்டு கரைகளுக்கும்
அடையாளமே அந்த நதி தான்.
அந்த நதியின் பெயரை வைத்து தான் கரைகளை வைத்து வெவ்வேறு பெயர்களைக் கொண்டு அழைத்துக்கொண்டு இருக்கிறோம்.
எல்லா நதிக் கரைகளில் இருக்கும் மண் ஒன்று தான்.
அந்த விதத்தில் இன்னொரு நதிக் கரையாக வேறுபடுத்தி பார்க்க முடியாது.
ஆன்மீகத்தின் அடிப்படை உண்மை என்னவென்றால்
எனக்குளிருந்து என்னை இயங்க வைத்துக்கொண்டு இருக்கும்அந்த ஒளியின், அந்த பிரபஞ்சத்தின் அனைத்து உயிர்களின் பகுதியாக இருந்து
இயங்க வைத்துக்கொண்டு இருக்கிறது.
நதியின் கரையைப் போல நாம் அனைவருமே ஒன்றாக இணைக்கப் பட்டிருக்கிறோம்.
அடி ஆழத்தில் நமக்குள் பிரிவோ,
வேறுபாடோ எதுவுமே கிடையாது.
உங்களுடைய ஆன்மீகத் தன்மை
வெளிப்படும் போதெல்லாம்
ஆன்மீக ரீதியில் நாம் நாம் அனைவருமே ஒன்று என்பதால் மற்றவர்களுடன் சேர்ந்து இருக்க வேண்டும் என்று தோன்றும்.
அப்படி ஒன்றாக ஒரு இடத்தில் குழுமி இருக்கும்போது ஒருவருடைய கருத்திற்கும், மற்றவருடைய கருத்திற்கும் வேறுபாடு தோன்றும்.
அப்போது ஒவ்வொருவரும் அவரவர் கருத்தை சரி என்றும்,முன்னிலை படுத்த வேண்டும் என்ற முயற்சி எடுக்கும்போதுஆன்மிக நிலையை விட்டு விலகி இருக்கிறோம் என்று அர்த்தம்.
அப்போது தனியாக இருக்க வேண்டும்
என்ற எண்ணம் மேலோங்கும்.இந்த முரண்பாட்டுக் கிடையில் தவிக்கும் சூழ்நிலை உண்டாகும்.
இதுபோல முரண்பாடுகள் தான்
நம்மை தனிமை படுத்துகிறது.
வாழ்க்கையில் நிலையான தன்மை, நிலையற்ற தன்மை என்ற முரண்பாடுகளில் இதுவும் ஒன்று.
பொருள் சேர்க்க வேண்டும் என்ற தேவையில்
சுய நலம் பிறக்கிறது.
அதை மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும்
என்ற தேவையில் சுயனலமின்மை வெளிப்படுகிறது.
நம்மிடம் என்ன இருக்கிறதோ அதைத்தான்
கொடுக்க முடியும்.
இப்படி அனேக முரண்பாடுகளின் ஓட்டத்தில் பயணிப்பது தான் வாழ்க்கை என்று புரிந்து
கொண்டால் முரண்பாடுகளால் பிரச்சினை வராது.
ஏற்றுக்கொள்ள பழகிக் கொண்டால், வாழ்க்கை பயணம் ஒரு நதியை போல சீரான ஓட்டமாக ஓடும்.
இப்படி சலனமில்லாமலும், சங்கடம் இல்லாமலும் வாழ்க்கை பயணம் தொடர்ந்தால்
முடிவில் அந்த நதி கடலோடு கலப்பது போல
நாமும் இறைநிலையின் தன்மையோடு ஒன்றாக கலந்து கரைந்துவிடும் அனுபவம் கிட்டும்.
ஆக, முரண்பாடுகளையும் ஏற்றுக் கொள்வதே வாழ்க்கை.அப்படிப் பட்ட வாழ்வே ஞான வாழ்வு, சிறந்த யோக வாழ்வு 
 யோக வாழ்வின் பயணத்தில் 

No comments:

Post a Comment