Tuesday 19 December 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

முகநூலில் ஜனநாயகம்......
ஒரிஜனல் up loader வாழ்க.எழுதியவர் சேவியர் ராஜன்
படகுகளில் எந்த GPS கருவியையும் பொருத்த மாட்டோம், எங்கள் வாழ்வாதாரம் கெட்டுவிடும் ஆனால் அவசர காலத்தில் ஐந்து நிமிடத்தில் அத்தனை மீட்புக்குழுக்களும் எங்களை வந்தடைய வேண்டும்.
ஒரு கப்பல் படைத்தளமோ, விமானப்படைத் தளமோ அமைக்க விட மாட்டோம், எங்கள் வாழ்வாதாரம் கெட்டுவிடும். ஆனால் புயல் ஆரம்பித்த ஐந்தே நிமிடத்தில் நாட்டிலுள்ள அத்தனை போர் கப்பல்களும் விமானங்களும் எங்களைச் சுற்றி நிற்க வேண்டும்.
ஒரு மின் உற்பத்தி நிலையம்கூட அமைய விட மாட்டோம், அது எங்கள் வாழ்வாதாரத்தை கெடுத்துவிடும் ஆனால் தடையில்லாத, ஏற்ற இறக்கமில்லா சீரான மின்சாரம் 24 மணி நேரமும் வேண்டும்.
கச்சா எண்ணை எடுக்க அனுமதிக்க மாட்டோம், அது எங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் ஆனால் எரிவாயு, பெட்ரோல், டீசல் எல்லாம் அடிமாட்டு விலைக்கும் மண்ணெண்ணை, உரம் பூச்சி மருந்து எல்லாம் மானிய விலையில் கிடைக்க வேண்டும் இல்லையேல் போராட்டம்! போராட்டம்! போராட்டம்! .
சூப்பரப்பு. கடைசியில் நமக்கு போராட்டம் மட்டும்தான் மிச்சம்.
போலி ஜனநாயகம்....

No comments:

Post a Comment