Tuesday 19 December 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

யார் எப்படி அவமானப்படுத்தினாலும் கோபமே வராது அந்த துறவிக்கு.
அந்த ரகசியத்தை அறிந்து கொள்வதில் ஒரு சிஷ்யருக்கு ஆர்வம்.
`
துறவி விளக்கினார்.
"ஒரு ஏரியில் காலியானபடகில் அமர்ந்து தியானம் செய்வது என் வழக்கம். அப்படி ஒருமுறை தியானத்தில் இருந்தபோது நான் அமர்ந்திருந்த படகை வந்து முட்டியது ஒரு படகு.
'இப்படி அஜாக்கிரதையாக முட்டவிட்டது யார்?' என்று கோபமாகக் கண்களைத்திறந்து பார்த்தால் அது வெற்றுப்படகு!
`
காற்றுக்கு அசைந்து அசைந்து வந்து மோதியிருக்கிறது.
என்கோபத்தினை அந்த வெற்றுப்படகிடம் காட்டி என்ன பயன்?
`
யாராவது என்னைக் கோபப் படுத்தும்போது இதுதான் நினைவுக்கு வரும்;
இதுவும் வெற்றுபடகுதான் என்று அமைதியாகி விடுவேன் !
ஞானம் எப்போது வேண்டுமானாலும், எங்கே வேண்டுமானாலும்
வரலாம் !

No comments:

Post a Comment