Wednesday 20 December 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

நினைத்ததை முடித்தவன் எம்ஜிஆர் .
ஆச்சரியமாக உள்ளது இல்லயா ?
************************************************************
எம்ஜிஆர் தன்னுடைய இளம் வயதில் ஆங்கில திரைப்படங்களை பார்த்ததின் விளைவுதான்
நாடோடி மன்னன் படம் எடுக்க தூண்டியது . ஏராளமான பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு 
1958ல் திரைக்கு வந்து நாடு முழுவதும் ரசிகர்களால் மக்களால் ஏராளமான பாராட்டுக்களை பெற்று
சரித்திர சாதனை புரிந்தது .
எம்ஜிஆர் வெற்றி பெற்று நினைத்ததை முடித்தார் .
1967 தேர்தலில் தமிழகத்தில் பேரறிஞர் அண்ணாவின் தலைமயில் திமுக ஆட்சி அமைந்திட நினைத்தார் . அதற்க்காக உயிர் தியாகம் வரை சென்று உழைத்து தானும் வெற்றி பெற்று தன்னுடைய இயக்கத்தையும் வெற்றி பெற செய்து தன்னுடைய தலைவர் பேரறிஞர் அண்ணா தமிழக முதல்வராக பதவி அமரவைத்த எம்ஜிஆர் நினைத்ததை முடித்தார் .
1972ல் எம்ஜிஆரையே அழிக்க நினைத்த திமுகவின் கனவை 1973 திண்டுக்கல்தேர்தல் துவங்கி 1987 வரை அரசியல் எதிரிகள் அனைவரையும் எதிர்த்து வெற்றி மேல் வெற்றி பெற்று தான் நினைத்ததை முடித்தார்
.
சினிமாவில் எம்ஜிஆரின் சரித்திரம் முடிந்துவிட்டது என்று 1959, 1967, 1972 கால கட்டங்களில் நடந்த சோதனைகளை தவிடு பொடியாக்கி எம்ஜிஆர் உருவாக்கிய திரை உலக சாதனைகள் வெற்றிகள் குவித்ததின் மூலம் தான் நினைத்ததை முடித்தார் .
1977 வரை எம்ஜிஆர் திரை உலகை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து திரை உலக வசூல் சக்ரவர்த்தி யாக திகழ்ந்தார் என்று திமுக தலைவர் திரு கருணாநிதி 1987 எம்ஜிஆர் மறைவு தினத்தன்று கூறியது நினைவிற்கு வருகிறது .
நினைத்ததை முடிப்பவன் - 1975ல் வெளியானது , தலைப்பிற்கு ஏற்ப எம்ஜிஆர் தான் வாழ்ந்த காலத்திலும் நினைத்ததை முடிப்பவன்
என்று சாதித்து காட்டினார்.
மறைந்த பின்னரும் 30 ஆண்டுகளாக அரசியலிலும் சினிமா மறு வெளியீடுகளில் , புது தொழில் நுட்ப
மறு வெளியீடுகளிலும் எம்ஜிஆர் என்ற தனி
மனிதரின் வெற்றிகள் சரித்திர சாதனையை நினைத்ததை முடிப்பவன் எம்ஜிஆர் ரசிகர்களாகிய நாங்கள் எப்போதும் பெருமை கொள்கிறோம் .
நன்றி டி ஜி ராமமூர்த்தி

No comments:

Post a Comment