Saturday 29 February 2020

பிரதமருக்கு முகநூலில் கொலை மிரட்டல் விடுத்தவள் பகிரங்க மன்னிப்பு கோரினாள்













பிரதமருக்கு முகநூலில் கொலை மிரட்டல் விடுத்தவள் பகிரங்க மன்னிப்பு கோரினாள்..
சேலம் மாநகர் மாவட்ட, பா.ஜ., முன்னாள் தலைவர் கோபிநாத் தலைமையில் நிர்வாகிகள், போலீஸ் கமிஷனர் செந்தில்குமாரிடம் புகார் அளித்தனர்.அந்த புகாரில், 'சமூக வலைதளங்களில், பரிமளா என்ற ஐடியில், மோடி கதையை முடிங்கப்பா... இவனெல்லாம் இன்னும், ஐந்து வருசம் இருந்தா இந்தியா அப்படியே, 50 ஆண்டு பின்னாடி போய் விடும். மனித வெடி குண்டு வேண்டும்னா சொல்லுங்க நான் வாரேன்' என பதிவிட்டுள்ள பெண்ணை கண்டறிந்து, அவள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறபட்டிருந்தது.
புகாரை பெற்ற சைபர் க்ரைம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பெண் சேலம், நீதிமன்ற ஊழியராக பணியாற்றி வரும், கன்னங்குறிச்சியை சேர்ந்த பரிமளா, 39, என்பது கண்டுபடிக்கப்பட்டது.அவள் மீது மற்றவர்களை குற்றம் செய்ய துாண்டியதாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே, பரிமளா, தன் பேஸ்புக் பக்கத்தில் மன்னிப்பு கோரி வெளியிட்டுள்ளதாவது: சேலத்தில், கடந்த பிப்.,25 மாலை, இரவு உணவு வாங்க ஓட்டலுக்கு சென்றேன். திரும்பி வந்து பார்த்த நிலையில், சில நண்பர்கள் எனக்கு போன் செய்து, பாரத பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுப்பது போல் என் பேஸ்புக் பக்கத்தில் பகிர்வு இருப்பதாக சொன்னார்கள்.உடனடியாக அந்த பதிவை அழித்து விட்டேன். இந்திய இறையாண்மைக்கும், அரசு பொறுப்பாளர்களுக்கும் எந்த வித மிரட்டலும் என்னால் வேண்டுமென்றே செய்யப்பட வில்லை. நான் இந்திய இறையாண்மை, நாட்டின் மீதும், பாரத பிரதமர் மோடி மீதும் மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கிறேன்,
எப்படியோ துரதிஷ்டவசமாக அந்த பதிவு பதியப்பட்டு விட்டது. வேண்டுமென்றே பதியப்படவில்லை. இனி வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நேராமல் பார்த்துக் கொள்வேன் என உறுதியளிக்கிறேன். மன்னிக்க வேண்டுகிறேன். இவ்வாறு பதிவிட்டுள்ளாள்.
குறிப்பு;இவளின் முகநூல் பக்கத்தில் உள்ள பதிவுகள் அனைத்தையும் பார்த்தாலே தெரியுமே..?எதிர்மறையாக வரும் பின்னூட்டங்களுக்கு இவள் பதிலையும் பார்த்தாலும் தெரியுமே..?இவள் சொல்வது அனைத்தும் பொய் என்பது தெரிந்தும் க்ரைம் போலீஸ்,இவளை தண்டிக்காமல் விடுவது ஏன்..?தெரியாமல் செய்தால் மன்னிக்கலாம்..இவளின் பல பதிவுகளை படித்துள்ளேன்..அவைகளை மறுத்து பின்னூட்டமும் செய்துள்ளேன்.இவள் மன்னிக்கப்பட வேண்டியவள் அல்ல..தண்டிக்கப்பட வேண்டியவள்.

No comments:

Post a Comment