Thursday 20 February 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

டைம் பாஸ்....
டெல்லியில் அவமானப்பட்ட திமுக,மற்றும் அதன் கூட்டணிக்கட்சி எம்.பிக்கள்..
திமுக தலைமையிலான எதிர்க்கட்சிகள் அவர்கள் வாங்கிய கையெழுத்து படிவங்களை, ஜனாதிபதியை அவரது இல்லத்தில் சந்தித்து நேற்று வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த டி.ஆர்.பாலுவிடம், செய்தியாளர்கள் சரமாரி கேள்விகளை கேட்டனர். இந்த கையெழுத்து இயக்கத்தால் அதை குடியரசுத் தலைவரிடம் வழங்குவதால் என்ன நடந்துவிடும்?எந்த நம்பிக்கையில் இதைச் செய்கிறீர்கள்?நீங்கள் எல்லாம் எம்.பி.க்கள்தானே?நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு,இந்த சட்ட திருத்ததிற்கு அதிகமான எம்.பி.க்கள் வாக்களித்து சட்டம் ஆக்கியதை எதிர்ப்பதால் இனி என்ன செய்யமுடியும் என நினைக்கின்றீர்கள்?எதுவும் நடக்காது என்பதை அறிந்தும் ஏன் இதற்காக இவ்வளவு செலவும்,இவ்வளவு பேரின் உழைப்பையும்,நேரத்தையும் வீணாக்கினீர்கள்?இதுதான் பகுத்தறிவா? என்று தொடர்ந்து கேள்வி எழுப்பினர்.
இது பற்றி டிஆர் பாலு கூறியதாவது: மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை ஜனாதிபதி தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இதை முன்னெடுத்தோம்.
எங்கள் தலைவர் சுட்டிக்காட்டியபடி இது வெறும் கையெழுத்து மட்டுமல்ல, தமிழக மக்களின் மனநிலை என்றார்.
தமிழக மக்களின் மன நிலையா?தமிழகத்தில் 8 கோடிக்கும் மேல் மக்கள் தொகை இருக்கும் போது,2 கோடி கைஎழுத்துதானே பெற்று உள்ளீர்கள்,மற்ற 6 கோடிபேர் இந்த சட்டத்திற்கு ஆதரவு எனும் போது, தமிழக மக்களின் அதிகமானவர்களின் மனநிலை இந்த சட்டத்திற்கு ஆதரவுதானே?மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது இதுவரை குடியரசு தலைவருக்கு தெரியாதா?அவர் தெரிந்து கொள்ள தாங்கள் அளித்த கைஎழுத்து பிரதி மட்டும்தான் வழியா?என்றும்,ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களையும்,வட இந்தியர்களையும் ஆபாசமாக விமர்சித்தது குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்.அதற்கு டிஆர் பாலு உள்ளிட்ட எம்பிக்கள் பதிலளிக்க மறுத்து,விட்டால் போதும் என நடையை கட்டினர்.
குறிப்பு;இந்த புகைப்படத்தை காண்பித்து இஸ்லாமியர்களை ஏமாற்றி,அவர்களின் ஒட்டுக்களையும் பெற்று,ஆட்சியை பிடித்து கொள்ளையடிக்கத்தான் இத்தனை கஷ்டங்களும், உங்களின் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் படும் அவமானமும் என்று, இவர்கள் சொல்லவா முடியும்..?
நன்றி ராஜப்பா தஞ்சை

No comments:

Post a Comment