Friday 21 February 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

நல்ல குணங்கள்.....
🏵எதற்கு பிறர் நமக்கு மரியாதை தருகிறார்கள் என்பதை சற்று கவனித்தால் நம்மிடம் உள்ள நல்ல குணங்களால் தான் என்பது புரியும். இதில் வயதோ பதவியோ முக்கியமல்ல.
🏵பாராட்டுக்கும் புகழ்ச்சிக்கும் வேறுபாடு தெரிந்து கொள்ளுங்கள்.
பாராட்டை ஏற்றுக் கொள்வோம். முன்னேற்றத்திற்கு வழி. புகழ்ச்சி கெடுதலுக்கு வழி.
🏵நினைத்தது ஒன்று. நடந்தது ஒன்று. பிடித்தது ஒன்று. கிடைத்தது ஒன்று. இது தான் இங்கே பலரது வாழ்க்கை.
🏵எதிர்ப்பு தெரிவித்தவர்கள் ஆதரவு தெரிவிக்கும் நாளில், எப்போதுமே புரிந்து கொள்ளாதவர்கள் கூட நம்மை அதிகம் புரிந்து கொண்டது போல தோற்றம் அளிக்க ஆரம்பித்து விடும்.
🏵உண்மைகளை பேசுவதை மட்டும் வழக்கமாக நீங்கள் கொண்டிருந்தால், உங்களோடு பொய்களை மட்டும் பேசுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்லும்.

No comments:

Post a Comment