Saturday 15 February 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

பதிப்புத் துறையில் பலர் உயர ஏணியாக இருந்தவர், வாசிப்பால் சமநிலை மலர பாடுபட்ட பழனியப்பனார் புகழ் வாழ்க.
நாளும் ஒரு நற்கருத்து! (15-02-2020)சனிக்கிழமை!
நட்பும் உறவும் இருகண்கள்!
பழனியப்பா பிரதர்ஸ் குழும நிறுவனர், இராயவரம் அமரர் திரு.செ.மெ.பழனியப்ப செட்டியாரின் நூற்றாண்டு விழா இன்று 15-02-2020 சென்னையில் கொண்டாடப்படும் வேளையில் அவர்களைப்பற்றி சற்றுசிந்திப்போம்.
திரு.செ.மெ.பழனியப்ப செட்டியார் அவர்கள் தனது கல்வியை பர்மா நாட்டிலுள்ள ரங்கூனில் கற்றவர். புத்தகம் வாசிக்கும் பழக்கம் இளைமையிலேயே இருந்த காரணத்தால், தான் பயின்ற பள்ளியில் ஒரு நூலகத்தை ஆரம்பிக்க வேண்டும் என விரும்பினார்.அந்த ஆசை நிறைவேறு
வதற்கு முன்னரே இந்தியாவிற்கு திரும்பிவிட்டார்.திருச்சியில் புகழ்பெற்ற கிளைவ் ஹாஸ்டல் அருகில் ஒரு கடையை ஆரம்பித்து, அதில் பேனா, மை, மற்றும் எழுது பொருட்களை விற்பனை செய்து வந்தார். பின் நோட்டுபுத்தகம் விற்று வந்தார்.1940 ஆம் ஆண்டு ஒரு முறை சென்னைக்கு ரயிலில் வரும் பொழுது, தன்னுடன் பயணித்த திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராகப் பணியாற்றிய திரு.ஐயம்பெருமாள் கோனாரைச்சந்தித்தார்திரு.கோனார் அவர்கள் தான் எழுதியுள்ள மாணவர்களுக்கான தமிழ் உரை நூலை வெளியிட நல்ல பதிப்பகத்தை தேடிச்செல்வதாகச்
சொன்னதும்,உடனே திரு.பழனியப்ப செட்டியார் தானே அதை வெளியிடு வதாகச்சொன்னதால் பிறந்தது தான் "பழனியப்பா பிரதர்ஸ்"என்னும் நிறுவனம்.மாணவர் உலகத்திற்கு அதனால் கிடைத்தது தான் "கோனார் உரை நூல்".
தமிழ்நாட்டில் படித்த மாணவர்களின் உற்ற தோழனாக விளங்கியது "கோனார் உரைநூல் " தான் என்றால் மிகையில்லை.திரு.பழனியப்ப செட்டியார் அவர்கள் நண்பர்களை அதிகமாக பெற்றவர்கள்.அதனால் புகழ்பெற்ற அறிஞர்கள் பலரும் இவர்காட்டும் நட்பின் பாசத்தால் தங்களது எழுத்துக்களை புத்தகமாக வெளியிட இவரிடம் தந்தனர்.புகழ் பெற்ற புத்தகங்கள் சிறந்த முறையில் வெளிவந்து தமிழகத்திற்கும், தமிழுக்கும் பெருமை சேர்த்தது.குழந்தைகளுக்கும் சிறந்த புத்தகங்கள் பல இவரால்தான் கிடைத்தது என்றால் அது உண்மையே!பதிப்பகத்துறை மட்டுமல்லாது பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்தவர் செட்டியார் அவர்கள்.உறவினரை போற்றி அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்தவர் செட்டியார் அவர்கள்.அவர்களது
பிள்ளைகள் உயர்கல்வி கற்க, கல்லூரி கல்விக்கட்டணத்தை,எந்தவிதமான விளம்பரமும் செய்யாமல் முழுமையாக கொடுத்து உதவியவர்கள்.
இவரது உதவியால் உயர்கல்வி கற்றபலரும் இன்று பல வெளிநாடுகளில் சிறப்போடு
வாழ்கிறார்கள். அவர்
களால் அந்த குடும்பங்கள் சிறப்புற்று திகழ்கின்றன.பல உறவினர்களை தனது நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் வேலைக்கு அமர்த்தி அழகு பார்த்தவர்கள்.தனது வாழ்நாள் முழுவதும் நட்பையும், உறவையும் தனது இரு கண்களாக நினைத்து போற்றி யவர்கள்.எல்லோரிடமும் குறிப்பாக தனது நிறுவன ஊழியர்களிடமும் அன்பாக பழகியவர்கள். துணிவும் நேர்மையும் வெற்றி பெற மிகவும் தேவை என்று சொன்னவர்கள்."வானமே எல்லை"என நினைத்து தன் வாழ்க்கையை வாழ்ந்தவர்கள்.தாயும் தந்தையுமே இவர் வணங்கும் தெய்வங்கள்! கந்தக்கடவுளை தன் சொந்தக்காரனாக நினைத்து வழிபடுபவர்கள்.
சென்னையில் அண்ணா சாலையில் கட்டிய கட்டிடத்திற்கு தன் அன்னையின் பெயரான கண்ணம்மையின் பெயரைச்சூட்டியவர்
கள்.சென்னை ராயப்பேட்டையில் கட்டிய நிறுவன கட்டிடத்திற்கு தனது நண்பரும் தான் உயர உறுதுணையாக இருந்த ஐயம்பெருமாள் கோனாரின் பெயரில் "கோனார் மாளிகை"
என்று பெயரிட்டு மகிழ்ந்தவர்கள்.இறுதி
வரை ஓயாமல் உழைத்தவர்கள்.
பதிப்பக உலகில் வித்தகராக விளங்கிய பெருமகனாரை நாமும் போற்றி வணங்குவோம்!நாளை மீண்டும் சந்திப்போமா! தகவல்தந்தோன்
கவிஞர் அரிமழம் ப.செல்லப்பா
9791033913
aamchennai@gmail.com
அவருக்கு அடியேன் எழுதிய புகழ்அஞ்சலி கவிதையை உங்களோடு பகிர்வதில் மகிழ்கிறேன்.
பதிப்புஉலக நாயகராம்
பழனியப்பர் பல்லாண்டு வாழ்க!
கண்ணம்மை பெற்றெடுத்த
தலைமகனே!
காலமெலாம் உழைத்திட்ட
பெரியவரே!
என்னாளும்
நட்புதனை
மதித்தவரே!
எறும்பைவிட
சுறுசுறுப்பாய் திகழ்ந்தவரே!
உறவுதனை பேணியதில் மகிழ்ந்தவரே!
உண்மைவழி என்னாளும்
சென்றவரே!
திறமைக்கு
மரியாதை
தந்தவரே!
தன்னுழைப்பை தருவதிலே
மகிழ்ந்தவரே!
கோனாரின்
நண்பரான
பழனியப்பர்
கொஞ்சுதமிழ் புரிந்திடவே
உரைநூலை
மாணவர்கள் படிப்பதற்கு
தந்திட்டார்!
மாபெரும் வெற்றிதனை
பெற்றிட்டார்!
குழந்தைகள் படிப்பதற்கு
புத்தகங்கள்
குறைவின்றி வெளியிட்ட
பெருமகனாம்!
அழகுதமிழ் இலக்கியத்தின்
உரைநூலும்
அறிவார்ந்த ஆன்றோரின்
பலநூலும்
பழனியப்பா வெளியிட்டு
மகிழ்ந்திட்டார்!
பாரினிலே
புகழ்பெற்று
திகழ்ந்திட்டார்!
குழந்தைமனம் கொண்டவராம்
பழனியப்பா!
கோபுரம்போல் உயர்ந்ததிலே
வியப்பில்லை!
பதிப்புலகின் வித்தகராய்
திகழ்ந்திட்டார்!
பல்வேறு தொழில்களும்
தொடங்கிட்டார்!
விதிவழிதான் வாழ்க்கைஎனச் சொன்னாலோ
வித்தகராம் பழனியப்பர்
ஏற்கமாட்டார்!
புதிதாய்
சிந்திக்க
பழகுஎன்பார்!
புரியும்பார்
புதுப்பாதை
நட என்பார்!
நதிபோல
நாளெல்லாம்
திகழ்என்பார்!
நாளையதினம் உன்கையில்
எனஉரைப்பார்!
துன்பங்கள்
வந்தாலும்
சோர்ந்ததில்லை!
தொட்டபணி ஒருநாளும்
தோற்றதில்லை!
மண்ணுலகில் சரித்திரத்தை
படைத்திட்டார்!
மாற்றாரை
அன்பாலே
வென்றிட்டார்!
உதவிக்கு
என்னாளும்
முன்நிற்பார்!
உழைப்பாளி உயர்வுக்கு
துணையாவார்!
நிதம்ஒருவர் இவரிடத்தில்
உதவிகேட்க
நிச்சயமாய் உதவிசெய்து
மகிழ்ந்திடுவார்!
நூறாண்டு கொண்டாடும்
வேளையிலே
நாளெல்லாம் நம்மனதில்
அவர்இருப்பார்!
பாராண்ட
பதிப்புஉலக
பழனியப்பர்
புகழ்நிலைக்கும் பூவுலகில்
என்னாளும்!
பாவாக்கம்:அருள்நெறிக்கவிஞர் அரிமழம் ப.செல்லப்பா.
15-02-2020.

No comments:

Post a Comment