Monday 17 February 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

டெல்லி தேர்தல் காட்டும் உண்மை.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு...
ஜனநாயகத்தில் ஒரு கட்சியை சேர்ந்த வேட்பாளர் வெற்றி பெறுவதும், எதிர்த்து போட்டியிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் தோல்வி அடைவதும் இயற்கை. அதுபோல அவர்கள் பெற்ற வாக்குகளும் மாறுபடும். அதுவும் ஏற்றுக் கொள்ளக் கூடியதே. ஆனால் டெல்லி சட்டமன்ற தேர்தலில் முஸ்தபாபாத் தொகுதியின் வாக்கு எண்ணிக்கையில் 23-வது சுற்று இந்தியாவிலுள்ள ஒவ்வொரு இந்துக்களையும் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளி உள்ளது. Also Read - திமுக தமிழன் பிரசன்னாவின் பித்தலாட்டத்தை வெளிச்சம் போட்டு காட்டிய S.G.சூர்யா! அப்படி என்ன அதிர்ச்சி இதில் உள்ளது என்கிறீர்களா? வாருங்கள் பார்க்கலாம். இந்த தொகுதியில் பாஜக சார்பில் ஏற்கனவே அந்த தொகுதியின் எம்எல்வாக இருந்த ஜெகதீஸ் பிரதான் போட்டியிட்டார். ஆம் ஆத்மி சார்பில் ஹாஜி யுனுஸ் போட்டியிட்டார். 14-வது சுற்று முடிவில் பாஜக வேட்பாளர் ஜெகதீஷ் பிரதான் 57056 வாக்குகள் பெற்றிருந்தார். ஆம் ஆத்மி கட்சியின் யுனுஸ் 30400 வாக்குகளை பெற்றிருந்தார். அதுபோல 14-வது சுற்றில் மட்டும் யுனுஸ் பெற்ற வாக்குகள் 2635. ஜெகதீஷ் பிரதான் பெற்ற வாக்குகள் 4587. 14-வது சுற்று வரை இரு வேட்பாளர்களும் பல ஆயிரக்கணக்கான வாக்குகளை பெற்று வந்தனர். Also Read - 'மக்களுக்கு பாதுகாப்பான எந்த திட்டத்தையும் அமல்படுத்தக் கூடாது' - வைரலானது உதயநிதியின் வீடியோ! ஆனால் 15-வது சுற்றிலிருந்து ஒவ்வொரு சுற்றிலும் பாஜக வேட்பாளர் ஜெகதீஷ் பிரதான 100 ஓட்டுகளைகூட பெறவில்லை. இந்த நிலை 23-வது சுற்று வரை நீடித்தது. உதாரணத்திற்கு 19-ஆவது சுற்றி எடுத்துக் கொண்டால், பாஜக வேட்பாளர் ஜெகதீஸ் பிரதான் வெறும் 36 வாக்குகளை மட்டுமே பெற்று உள்ளார். ஆனால் அதேநேரம் ஆம் ஆத்மி வேட்பாளர் ஹாஜி யுனுஸ் 7904 வாக்குகளை பெற்றுள்ளார். அவர் 23-வது சுற்று வரை இது போலவே தொடர்ந்து ஏறக்குறைய மொத்த வாக்குகளையும் பெற்றுள்ளார். 14-வது சுற்றின் போது ஏறக்குறைய 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றிருந்த பாஜக வேட்பாளர் ஜெகதீஷ் பிரதான், 23-வது சுற்றின் முடிவில் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியிருந்தார். அதாவது அவர் 70858 வாக்குகளைப் பெற்றிருந்தார். ஆம் ஆத்மி வேட்பாளர் யுனுஸ் 82407 வாக்குகள் பெற்றிருந்தார். அதுபோல 23-வது சுற்றில் ஜெகதீஷ் பிரதான் பெற்றது வெறும் 5 வாக்குகள் மட்டுமே. இது வாக்குப்பதிவு எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறால் நடந்தது என்று சொல்வதா? ஓட்டுச்சாவடிகள் கைப்பற்றப் பட்டன என்று சொல்வதா? முறைகேடு நடந்துள்ளன என்று சொல்வதா? கள்ள ஓட்டு போட்டார்கள் என்று சொல்வதா? இதுபற்றி ஏன் பாஜக வேட்பாளரும் அப்போதைய எம்எல்ஏவுமான ஜெகதீஷ் பிரதான், தேர்தல் கமிஷனில் புகார் அளிக்கவில்லை? இந்தக் கேள்வி அனைவர் மனதிலும் எழும். ஆனால் என்ன நடந்தது என்பது பாஜகவினருக்கு நன்றாக தெரியும். ஆகவேதான் அமைதியாகி விட்டனர். 23-வது சுற்றில் ஆம் ஆத்மி வேட்பாளர் ஹாஜி யூனுஸ் 82407 வாக்குகள் பெற்றபோது, அந்த தொகுதியின் எம்எல்ஏவான ஜகதீஸ் பிரதான் எப்படி வெறும் 5 வாக்குகள் மட்டும் பெற்றார்? இதற்கு என்ன காரணம்? முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளில் அவர்கள் மசூதிகளில் அறிவித்ததன் அடிப்படையில், மத ரீதியாக முடிவெடுத்து, ஒட்டுமொத்தமாக ஆம் ஆத்மி வேட்பாளர் ஹாஜி யுனுசுக்கு வாக்களித்து உள்ளனர் என்பது அப்பட்டமாக தெரியவந்துள்ளது. மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் இதுபோன்று மதரீதியாக சர்ச்சுகளிலும், மசூதிகளிலும் முடிவு செய்யப்பட்டு வாக்களிப்பது சரியா? இது ஜனநாயகத்திற்கு நல்லதா? இந்த நிலை இப்படியே தொடர்ந்தால் எதிர்கால சூழல் எப்படி இருக்கும்? இதுபோன்று மேலும் சில கேள்விகளும் எழுகின்றன. முஸ்லிம்கள் எதற்காக ஆம்ஆத்மி வேட்பாளர்களுக்காக ஒட்டுமொத்தமாக வாக்களித்தார்கள்? இதற்காக அரவிந்த் கெஜ்ரிவால் முஸ்லிம்களுக்கு என்னென்ன வாக்குறுதிகளை அளித்து உள்ளார்? அதேநேரம் இந்துக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக அரவிந்த் கெஜ்ரிவால் ஏன் இந்துக்களிடம் வாக்குறுதிகளை வழங்கவில்லை? ஒரே காரணம்தான். முஸ்லிம்களுக்கு வாக்குவங்கி உருவாக்கப்பட்டுவிட்டது. கிறிஸ்தவர்களுக்கும் வாக்கு வங்கி உள்ளது. ஆனால் இந்துக்களுக்கு வாக்குவங்கி இல்லை. அவர்கள் கட்சி ரீதியாக பிளவுபட்டு வாக்களிக்கின்றனர். ஆனால் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் அப்படி அல்ல. மதரீதியாக முடிவெடுத்து வாக்களிக்கிறார்கள். இந்த உண்மையை இந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும். பெரும்பான்மை இந்துக்களும் இதுபோன்று மதரீதியாக முடிவெடுத்து, வாக்களித்தால் மட்டுமே சிறுபான்மையினரின் இந்த தவறை அவர்களுக்கு புரிய வைக்க முடியும். அரசியலில் மதத்தை நுழைப்பது தவறு, அது ஜனநாயகத்தை சீர்குலைப்பது என்று உணர வைக்க முடியும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

No comments:

Post a Comment