Saturday 15 February 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

முகம் காட்டாமல் வாரி வழங்கிய வள்ளல்கள்....
ஆனால்......
வேலியே பயிரை மேய்ந்தால்,வேலி தேவை தானா.?
தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு கடந்த 5-ம் தேதி மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதற்கான விழா நாள்களில் மொத்தம் 13 லட்சம் பக்தர்கள் கலந்துகொண்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், அறநிலையத்துறை இணை ஆணையர் தென்னரசு மற்றும் உதவி ஆணையர் கிருஷ்ணன் ஆகியோர் குடமுழுக்கு விழாவில் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதன்மைச் செயலாளர், ஊழல் ஒழிப்புத் துறை, தஞ்சை கலெக்டர் ஆகியோருக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கரிகாலசோழன் என்பவர் கூறுகையில், ``பெரியகோயில் குடமுழுக்கு விழா பெரும் விமரிசையாக நடைபெற்றது.விழா சிறப்பாக நடைபெற வேண்டும் என கோயில் திருப்பணிகளுக்காகவும் குடமுழுக்கு பூஜைகளுக்காகவும் கோயில் கோபுரக் கலசம் தொடங்கி யாகபூஜை வரை என அனைத்துக்கும் பல மாவட்டங்களிலிருந்து தொழில் அதிபர்கள், பக்தர்கள் என பலர் தாமாக முன் வந்து பணமாகவும், பொருள்களாகவும் நன்கொடை வழங்கினர்.
இவற்றுக்கு அறநிலையத்துறை சட்டப்படி நன்கொடை ரசீது உடனே கொடுக்க வேண்டும். ஆனால், கோயில் இணை ஆணையர் தென்னரசு, உதவி ஆணையர் கிருஷ்ணன் ஆகியோர் கூட்டு சேர்ந்துகொண்டு குடமுழுக்கு முடிந்த பிறகு ரசீது வாங்கிக் கொள்ளலாம் என ரசீது எதுவும் கொடுக்காமல் லட்சக்கணக்கில் முறைகேடு செய்துள்ளனர். அத்துடன் குடமுழுக்கு விழாவில் கலந்துகொள்வதற்காக விவிஐபி, விஐபிக்கு அனுமதி அட்டை தயார் செய்து கொடுக்கப்பட்டது.
அந்தப் பாஸை ஆயிரக்கணக்கில் பெற்று கலெக்டருக்கு தெரியாமல் ரூ.500, ரூ.1,000-த்துக்கு விற்பனை செய்து முறைகேடு செய்துள்ளனர். மேலும், யாகசாலைப் பந்தலில் நன்கொடை கொடுத்தால்தான் அமர முடியும் என பணம் பெற்றுக்கொண்டு பகதர்களை ஏமாற்றியுள்ளதும் தெரியவந்துள்ளது.
கோயில் நிர்வாகத்துக்கும், அறநிலையத்துறைக்கும் எந்த சம்பந்தமுமில்லாத ரெங்கராஜ் என்பவர் கோயிலுக்குள் ஆல் இன் ஆளாக வலம் வருகிறார். ரெங்கராஜை துணையாக வைத்துக்கொண்டு இருவரும் எப்போதும் முறைகேடாக லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து வருகின்றனர். இதனால் அறநிலையத்துறைக்கு வரவேண்டிய வருமானம் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது. எனவே, இது குறித்து முழுமையாக விசாரணை செய்து அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அனுப்பியுள்ளேன். மிஸ்டர் கிளீன் எனப் பெயர் எடுத்து இருக்கும் கலெக்டர் கோவிந்த ராவ் அவர்கள் இதை அக்கறையுடன் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், எடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
குறிப்பு;
தஞ்சை பெரிய கோயிலின் குடமுழுக்கு விழா திருப்பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்களில் ஒருவரான கோவை குமார்(42), விமானக் கலசத்துக்கு பொன்முலாம் பூசும் திருப்பணியை ஏற்றதுடன், வெவ்வேறு சேவைகளிலும் ஈடுபட்டுள்ளார். இதற்காக தனது சொந்த வீட்டையே வங்கியில் ரூ 20 லட்சத்திற்கு அடமானம் வைத்தும்,சேமிப்பு மற்றும் பி.எஃப். சேமிப்பு தொகையைக் கொண்டு, கலசத்துக்குத் தேவையான தங்கம் வாங்கிக் கொடுத்துள்ளார்.
குஜராத்தில் இருந்து மீட்டுவரப்பட்ட ராஜராஜன்-லோகமாதேவி சிலைகளுக்கு பட்டாடைகள் வாங்கி அணிவித்து. 10 ஆயிரம் பேருக்கு அன்னதானமும் வழங்கியுள்ளார்.
தஞ்சை பெரிய கோயில் விமான கலசம் திருப்பணி நன்கொடையாளர்களில் குமாரை தவிர மற்றொருவர் மதுரையைச்
சேர்ந்த சிவில் காண்ட்ராக்டர் கார்த்திகேயன் 202 கிராம் தங்கமும், குமார் 134 கிராம் தங்கமும், திருப்பணிக்கான ஸ்தபதி கூலி ரூ.5.50 லட்சத்தை இருவரும் இணைந்து வழங்கியுள்ளதாகவும், கோயிலில் 10 ஆயிரம் பேருக்கு அன்னதானத்தை குமார் வழங்கியுள்ளதாகவும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே தெரிவித்துள்ளார்.
இப்படி வெளியில் தெரியாத, எத்தனை எத்தனை பக்தர்கள் இன்னும் என்ன என்ன செய்துள்ளார்களோ?
சொந்த வீட்டை அடமானம் வைத்து கோவிலுக்கு செய்த பக்தனின் காசை கொள்ளயடித்த அறங்காவல் துறை அதிகாரிகள் உருப்படுவான்களா?
இவ்வளவு பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் அதை பாதுகாக்க வைத்து சென்ற சொத்துக்கள் என்ன ஆனது..? சொத்துக்களின் வருமானம்,உண்டியல் காணிக்கை,மற்றும் கோவிலில் தரிசனத்துக்கு நின்றால் சாதா கட்டணம்,உட்காந்தால் சிறப்பு கட்டணம்,உருண்டால் விஐபி கட்டணம்.இரு சக்கரம் வாகனம் நிருத்தினாலும் கட்டணம்,செருப்பு வைத்தாலும் கட்டணம் தேங்காய் உடைத்தாலும் கட்டணம்.இவ்வளவையும் அறங்காவல் துறை என்ற பெயரில் அரசு எடுத்துக் கொண்டு,23 ஆண்டுகளுக்கு பின் நடந்த குடமுழுக்கு செலவு முழுவதும் பக்தர்களை ஏற்றுக்கொள்ளச் செய்தும்,அதிலும் கொள்ளையடித்த அதிகாரிகளும், கட்சிகாரர்களும்,அரசும் உருப்படுமா?
இத்தனை ஆண்டுகள் ஆகியும்,பராமரிப்பு இன்றி கும்பாபிஷேகம் காணத சிவன் விஷ்ணு ஆலயங்கள் எத்தனை எத்தனை?
கொள்ளையடிப்பதற்கு இந்து கோயில்,அரசு நிதி ஒதுக்கீடு, பள்ளிவாசல் பராமரிப்புக்கு 5 கோடி,சர்ச்சு பராமரிப்புக்கு 5 கோடி..
வேலியே பயிரை மேய்ந்தால்..?வேலி தேவைதானா?
சொந்த வீட்டை அடமானம் வைத்த பக்தனும்
அந்த வீட்டை அடமானம் வைக்க சம்மதித்த அவர் குடும்பத்தினரும் தெய்வத்திற்கு சமமானவர்கள்.அவர்கள் வையித்தெரிச்சல் பட்டால்.?சிவன் சொத்து குலநாசம்..
இது எல்லாம் அவர்களுக்கும் தெரியும்தானே?பின் எப்படி?
நன்றி ராஜப்பா தஞ்சை

No comments:

Post a Comment