Monday 14 October 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

அமைதியை அனுபவிக்கலாம்......
''நூறு ஒட்டகங்கள்...''
___________________
பிரச்சனைகளே இருக்கக் கூடாது என மனிதனாய்ப் பிறந்த யாரும்… ஏன்? உயிர்கள் ஏதும் நினைத்து விட முடியாது…
உயிர்களாகப் பிறந்த அனைத்து ஜீவராசிகளுக்கும் ஏதேதோ வழிகளில் பிரச்சனைகள் இருக்கத் தான் செய்யும்..
அதை யாரும் இல்லாமல் செய்ய இயலாது.ஆனால், மனிதனாய்ப் பிறந்த நாம் அதை எப்படி கையாள்கிறோம் என்பதைப் பொறுத்தே அதன் தீவிரம் அமைகிறது..
வாழ்வில் பிரச்சனைகள் என்பது நூறு ஒட்டகங்கள் போன்றது... அனைத்தும் ஒரே நேரத்தில் படுப்பதற்கான வாய்ப்பு குறைவே..
ஒவ்வொன்றும் படுப்பதற்கான காலம் உள்ளது...சில பிரச்சனைகள் தானாக முடிந்து விடும். சிலவற்றை நாம் மெனக்கெட்டு முடித்து விடலாம்..
ஆனால் சில பிரச்சனைகள் முடிந்தால் வேறு சில பிரச்சனைகள் புதிதாக எழலாம்...
அனைத்துப் பிரச்சனையும் முடிந்தால் தான் நிம்மதியாக தூங்குவேன் என்றால் இந்த உலகத்தில் யாராலும் தூங்க முடியாது..
பிரச்சனைகள் அனைத்தும் எப்போது முடியும் என கவலைப்பட்டுக் கொண்டே இருக்காதீர்கள்....
எனக்கு ஒரு தீர்வு சொல்லுங்கள்" என்றவாறே ஒரு அறிஞர் முன்பாக நின்றிருந்தான் அவன்.அப்போது மாலை நேரம்..
அய்யா."நான் ஓடிக் கொண்டே இருக்கிறேன்..பல பிரச்சனைகள். வீட்டில், தெருவில், ஊரில், வேலை செய்யும் இடத்தில் என எங்குமே பிரச்சனைகள்..
என்னால் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை.. இதில் இருந்து விடுபட ஏதாவது ஒரு நல்ல தீர்வு சொல்லுங்கள் என்றான் அந்த அறிஞரிடம்..
அவர் அவனிடம் "தோட்டத்திற்குச் சென்று ஒட்டகங்கள் என்ன செய்து கொண்டு இருக்கின்றன எனப் பார்த்து விட்டு வா" என்றார்.
சென்றவன் திரும்பி வந்து , "100 ஒட்டகங்களும் நின்று கொண்டு இருக்கின்றன" என்றான்.
"நல்லது. அந்த 100 ஒட்டகங்களும் தரையில் படுத்தவுடன் அங்கே இருக்கிற ஓய்வறையில் நீ படுத்துத் தூங்கி விட்டு காலையில் திரும்பி வா.. " என்றார்..
"சரி அய்யா" என்றவாறு தோட்டத்திற்குப் போனவன் கண்களில் தூக்கம் இன்றி களைப்புடன் காலையில் திரும்பி வந்து "அய்யா.. இரவு முழுவதும் தூங்கவே இல்லை .. என்றான்.. "என்ன ஆச்சு?" என்றார் அந்த அறிஞர்..
"சில ஒட்டகங்கள் தானாகவே தரையில் படுத்து விட்டன..சில ஒட்டகங்களை நான் மெனக்கெட்டு படுக்க வைத்தேன். அனைத்து ஒட்டகத்தையும்
ஒரு சேர என்னால் படுக்க வைக்க முடியவில்லை.
சிலது படுத்தால் சிலது எழுந்து கொள்கின்றன..
அனைத்து ஒட்டகத்தையும் ஒட்டுமொத்தமாக படுக்க வைக்க முடியவில்லை. அதனால் நான் தூங்குவதற்குப் போகவே இல்லை" என்றான்.
அந்த அறிஞர் சிரித்தபடியே,
"இதுதான் வாழ்க்கை.. வாழ்க்கையில் பிரச்சனையை முடிப்பது என்பது ஒட்டகத்தை படுக்க வைப்பது போன்றது என்றார்..
ஆம்.,நண்பர்களே..,
நமக்கான பிரச்சனைகள் தீர்வதற்கான காலமும் உள்ளது..
ஆகவே ,சிலவற்றை காலத்தின் கரங்களில் ஒப்படைத்து விட்டு,
வாழ்வை அமைதியாக அனுபவிப்போம்

No comments:

Post a Comment