Wednesday 16 October 2019

மரங்களில் மூன்று வகைகளா..?? மரங்கள்..!

மரங்களில் மூன்று வகைகளா..??
மரங்கள்..!
🌲 மனிதர்கள் மரங்கள், செடி கொடி மூலமாகத் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதாவது அவற்றின் மூலமாகத்தான் தேவையான ஆக்சிஜனை பெறுகின்றனர்.
🌲 ஆக்சிஜனைத் தேவையான அளவு பெற்றுக்கொண்டு ஆரோக்கிய வாழ்வு வாழ மனிதனைச் சுற்றி நலம் பயக்கும் மரங்கள் அவசியமாகும். அவை பணம் தரும் மரங்களாகவும் இருந்தால் இன்னும் கூடுதல் பயனுள்ளதாக இருக்கும்.
🌲 சிறிய இடத்தில், அதாவது பத்துக்குப் பத்து அடியில்கூட மரங்களை வளர்க்க முடியும்.
🌲 வீட்டிற்கு குளிர்ச்சியையும், அழகையும் தரவல்ல மரங்களை நிழல், பயன் மற்றும் பணம் தரும் மரங்கள் என மூன்று வகைகளாகப் பிரித்துக் கொள்ளலாம்.
🌲 இதில் வேப்ப மரம், புங்கை மரம், சரக்கொன்றை, பு+வரசு, செர்க்கோலியா, மந்தாரை, மரமல்லி, நாகலிங்கம் மற்றும் வில்வம் ஆகியவை நிழல் தரும் மரங்கள் ஆகும்.
🌲 மா, பலா, வாழை, தென்னை, கொய்யா, சப்போட்டா, மாதுளை, எலுமிச்சை, சீதாப்பழம், அரை நெல்லி, முழு நெல்லி, பப்பாளி ஆகியவை பயன் தரும் மரங்கள்.
🌲 தேக்கு, சந்தனம், சிவப்பு சந்தனம், மகாகனி, இறக்குமதி சவுக்கு, பில்லா ஓக் ஆகியவை பணம் தரும் மரங்கள்.
🌲 கோடைக்காலம்தான் மரங்கள் நடுவதற்கு தகுந்த காலம்.
🌲 மரக்கன்றுகள் நடும்போது குறைந்தபட்சம் 4 அடி உயரம் இருக்க வேண்டும். அத்தகைய மரக்கன்றுகள்தான் பக்குவப்பட்ட மரக்கன்றுகள் எனப்படுகின்றன.
🌲 2ஓ2 அடி என்ற சதுரமும், 2 அடி ஆழமும் உள்ள குழியை எடுத்து, ஒரு பங்கு மணலை முதலில் கொட்ட வேண்டும்.
🌲 அதற்கு மேல் எரு 2 பங்கு, செம்மண் 3 பங்கு இட்டு, ஒரு கைப்பிடி அளவு வேப்பம் புண்ணாக்கு போட வேண்டும்.
🌲 தயார் செய்யப்பட்டக் குழியை ஆறு மணி நேரம் அப்படியே காலியாக விட்டுவிட வேண்டும். இதனால் குழியில் உள்ள வெப்பம் வெளியேறி செடி பசுமையாக இருக்க உதவும்.
🌲 இவ்வாறு தயாரான குழியில் மரக்கன்றுகளை காலை அல்லது மாலை வேளையில் தான் நட வேண்டும். வழக்கம் போல் மரக்கன்று நட்டவுடன் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
🌲 நிழல் தரும் மரங்களுக்குப் பராமரிப்பு செலவு கிடையாது. பழம் தரும் மரங்களுக்குப் பராமரிப்பு தேவைப்படும்.
🌲 இவை இரண்டு மூன்று ஆண்டுகளில் பயனளிக்கத் தொடங்கிவிடும்.
🌲 ஆனால் பணம் தரும் மரங்கள் பலனளிக்கக் குறைந்தபட்சம் பத்தாண்டுகள் ஆகும். இந்த மரங்கள் எவ்வளவு உயரமாக வளருகிறதோ அவ்வளவு பயனை பணமாகத் தரும்.
🌲 இந்த மரங்களின் கிளைகளை வெட்டிவிட்டு நேராக வளருமாறு செய்தால் தண்டு தடித்து தரம் உயர்ந்ததாக அமையும்.
🌲 இத்தகைய மரக்கன்றுகளை நட்டு நம்முடைய வாழ்வாதாரத்தை அதிகரித்து, இயற்கையையும் வளப்படுத்துவோம்.

No comments:

Post a Comment