Monday 14 October 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

#குற்றம் பார்க்கின்..
ஒரு வாரமாக மக்கள் நடமாட்டத்தையே மாமல்லபுரத்தில் முடக்கி வைத்தாயிற்று. பிறகு எப்படி அங்கு குப்பை சேர்ந்தது? எல்லாமே செட்-அப்தானே..
இப்படியெல்லாம் பலரும் பதிவிடுவதைப் பார்க்கிறேன்..
மக்களின் மனநிலை எப்படியெல்லாம் மாறிவிட்டது என்பதைப் பார்க்கும் பொழுது ஆச்சரியமாக இருக்கிறது..
சற்றுக் கவலையாகவும் இருக்கிறது..
எல்லாவற்றிலும் குற்றம் கண்டுபிடிப்பது..
எல்லாவற்றையும் விமர்சிப்பது..
எல்லாவற்றையும் கேலி செய்வது..
என்று எப்படி இப்படி ஒரு எதிர்மறையான மனோநிலைக்கு மாறிவிட்டோம்?
ஒரு தேசத்தின் பிரதமர்..
தன் கட்சி மாநாட்டிற்காக இங்கு வரவில்லை..
தன் தேர்தல் பிரச்சாத்திற்காக வரவில்லை..
தன் நண்பர்களைச் சந்திப்பதற்காக வரவில்லை..
தேசத்தின் காரியத்திற்காக வந்திருக்கிறார்..
அதுவும் நம் மண்ணிற்கு..
இன்னொரு தேசத்தின் தலைவரையும் தன்னோடு சேர்த்தே அழைத்து வந்திருக்கிறார்..
சீனா நம் நம்பிக்கைக்குரிய தேசமல்ல..
எப்பொழுதெல்லாம் நாம் அதனுடன் நட்புக்கரம் நீட்டி முன் செல்கிறோமோ, அப்பொழுதெல்லாம் அது நமக்கு நம்பிக்கைத் துரோகம்தான் செய்திருக்கிறது என்பது வரலாறு..
இப்பொழுதும் அப்படித்தான்..
அது நமக்கு ஒரு நன்மையும் செய்யப் போவதில்லை..
இன்னும் சொல்லப் போனால், நாம் நமது எல்லைகளில் இனிதான் அதிகக் கவனத்தோடு இருந்தாக வேண்டும்..
அதுதான் முந்தைய சம்பவங்கள் நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கும் பாடம்..
அது ஒருபுறம் இருக்கட்டும்..
இப்போது நடந்திருக்கும் சந்திப்பு நம் தமிழக மண்ணில் நடந்திருக்கிறது..
இதன் மூலம் நம் மண், புகழின் உச்சிக்கேப் போகப் போகிறது..
உலக வரைபடத்தில் மகாபலிபுரமும் அதன் பெருமையும் மிக முக்கிய இடத்திற்கு நகர்ந்திருக்கிறது..
இனி சுற்றுலாப் பயணிகளின் வருகை வழக்கத்தை விட மிக அதிகமாக இருக்கப் போகிறது..
எந்த விதத்தில் பார்த்தாலும் இந்நிகழ்வு நமக்குப் பெருமிதத்தையும் பலன்களையும் தரப் போகிறது என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை..
நமக்கான மனமாச்சரியங்களைத் தனியே வைத்துக் கொள்வோம்..
விருந்தினர்கள் முன்பாக நம் வீட்டு ஆட்களை விட்டுக் கொடுத்துப் பேசுவதோ அல்லது அவர்களை இழிவு படுத்துவதோ எந்த விதத்திலும் ஏற்புடையதே அல்ல..
அது ஒருபுறம் இருக்கட்டும்..
பாரதப் பிரதமர் கடற்கரையில் அகற்றும் குப்பைகள் ஜோடிக்கப்பட்டதாகவேக்கூட இருக்கட்டும்..
அதனால் நமக்கென்ன பாதிப்பு?
இனி சாலையோரம் கிடக்கும் குப்பைகளை எடுத்துப் போட வேண்டும் என்று நமக்குத் தோன்றாவிட்டாலும்கூட, இது போன்ற ப்ளாஸ்டிக் குப்பைகளை நாமே சாலைகளில் போடக்கூடாது என்ற ஒரு சிறிய தயக்கமாவது நமக்குள் வரத்தானே செய்யும்?
ப்ளாஸ்டிக் பொருட்களைத் தூர எறியும் நேர்வுகளில் நம் கை ஒரு கணம் கூசத்தானே செய்யும்?
ஒரு பிரதமரே இப்படிச் செய்கிறாரே.. நாம் செய்தால் என்ன என்கிற எண்ணம் நம்மையறியாமலேயே நமக்குள் வர ஆரம்பித்துவிடும்..
நல்லதுதான்..
அது விளம்பரமாகவேக் கூட இருந்தாலும்..
நல்லதை எங்கு கண்டாலும் பாராட்டுங்கள்..
நல்லதை எவர் செய்தாலும் அதை வரவேற்றுப் பழகுங்கள்..
எல்லாவற்றிலும் குற்றம் கண்டுபிடித்துக் கொண்டே இருந்தால்.. நாளை நம்மால் வீட்டிற்குள்ளும் அப்படித்தான் இருக்க முடியும்..
மனைவியை..
பிள்ளைகளை..
அண்டை வீட்டாரை..
நண்பர்களை..
அதிகாரிகளை..
என்று எல்லோரையும் விமர்சிக்க ஆரம்பித்துவிடுவோம்..
அவர்களைக் கேலி செய்ய ஆரம்பித்துவிடுவோம்..
அதன் பிறகு எவரோடும் நாம் சந்தோஷமாகவும் மனநிறைவோடும் நாட்களை நகர்த்த முடியாமலேயே போய்விடும்..
எல்லாவற்றையும் இழந்து எதைச் சாதிக்கப் போகின்றோம்?
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை..
நன்றி ராதாகிருஷ்ணன்

No comments:

Post a Comment