Tuesday 29 October 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*வாழ்வில் வெற்றி கிடைப்பதற்கு முன்பே நாம் வெற்றியாளர் என்று நம்ப வேண்டும்.*
*༺༻*
வாயிலிருந்து வரும்
வார்த்தைகள்தான்
வாழ்வை உருவாக்கின்றன.
பேசுவதைக் கவனியுங்கள்.
எதைச் சொல்கிறோமோ
அது மெய்யாகிறது. நீங்கள்
உங்களைப் *புத்திசாலி* என்று
சொன்னால் நீங்கள் புத்திசாலி.
நாம் நம்மை பற்றி என்ன
சொல்கிறோமோ அதுதான் நாம்
சொன்னது மற்றும் நம்புவது
எதுவோ அதுவாகவே ஆகிறோம்
*உங்களால் முடியும்* என்று
நீங்கள் சொன்னால் உங்களால்
முடியும்; உங்களால் முடியாது
என்று சொன்னீர்களானால்
உங்களால் முடியாது. இரண்டு
வழிகளிலும் நீங்கள் சரியே”-
*༺༻*
எதிர்மறையான விஷயத்தையும்
சொல்ல நேர்மறையான வழி
ஒன்று நிச்சயம் உள்ளது. நான்
உடல்நலமின்றி உள்ளேன்
என்பதற்குப் பதிலாக,
குணமாகிக்கொண்டிருக்கிறேன்
என்று கூறுங்கள்.
நீங்கள் உடைந்துபோனதைப்
பற்றி இன்னொரு நபரிடம்
கூறவே கூறாதீர்!
"எனது
நிதி நிலை மாற்றத்திற்கு
உள்ளாகியிருக்கிறது” என்று
சொல்லுங்கள்.
*༺༻*
*நமக்கு நாமே உறுதி அளித்துக்கொள்வோம்*
நான் அருமையானவன்
நான் அதிகபட்சம்
ஆசீர்வதிக்கப்படுபவன்,
மிகவும் விரும்பப்படுபவன்.
நான் மேலானவன்.
நான் இங்கே வரும்போதும்
ஆசீர்வதிக்கப்பட்டவன்,
போகும்போதும்
ஆசீர்வதிக்கப்படுவேன்,
நான் நேர்மையானவன்.
எனது வார்த்தைகள் மலைகளை
நகரவைக்கும்,
நான் சாதனைகளை
முறியடிப்பவன்
என் கைகள் பட்ட இடமெல்லாம்
செழிக்கும்...
இதுபோன்ற செயல்முறைகள்
அகந்தையானவை என்று
சிலர் நினைக்கலாம்.
ஆனால், *அகந்தைக்கும், தன்னம்பிக்கைக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் தன்னம்பிக்கை உடையவர்களைப் பார்த்துப் பயப்படுவார்கள்.*
*༺༻*
பணத்தை வெற்றி என்று பலர்
நினைத்துவிடுகிறார்கள்.
நல்லது செய்வதற்கான
கருவியாகப் பணத்தைப்
பயன்படுத்துங்கள். நன்றி
செலுத்துவதற்கான
கருவியாக மற்றவருக்கும்,
உங்கள் குடும்பத்தினருக்கும்,
நண்பர்களுக்கும் கொடுக்கப்
பயன்படுத்துங்கள்.
ஆனால் வாழ்க்கையின்
லட்சியமாக அதை
ஆக்கிவிடாதீர்கள்.
*༺༻*
*பணத்தால் வென்றவர்களை விட எண்ணங்களால் வென்றவர்கள் அதிகம்*

No comments:

Post a Comment