Thursday 24 October 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

இவ்வுலகில் மிக சக்தி வாய்ந்த ஆயுதம் ~ புன்னகை🌸*
*༺༻*
எல்லோரையும் போல் தானும் அழகாக வேண்டும் என்று நினைத்த ஒரு மனிதர் மருத்துவரிடம் சென்று,
எல்லோரும் அழகா இருக்காங்க, நா மட்டும் அழகில்லை, மற்றவர்களை விட அழகாக வேண்டும், ஆலோசனை சொல்லுங்கள் என்றார். உடனே
*"தொப்பையை குறை"* என்று மருத்துவர் ஆலோசனை செய்தார்.
அன்று முதல் தன் *Excess sizeஐ Excersie* மூலம் குறைத்தார், கரைத்தார். உடம்பு அழகானது, முகம் மட்டும் அழகாகவில்லை.
*༺༻*
மீண்டும் வருத்ததுடன் அந்த ஊரில் உள்ள ஞானியிடம் சென்று, மருத்துவரிடம் சொன்னது போன்றே
"எல்லோரும் அழகா இருக்காங்க, நா மட்டும் அழகில்லை, மற்றவர்களை விட அழகாக வேண்டும், ஆலோசனை சொல்லுங்கள் என்றார்". உடனே அந்த ஞானி
*"குப்பையை குறை"* என்றார்.
ஐயா "குப்பையை குறைப்பதா" என்று சந்தேகத்துடன் கேட்டார்.
*ஆம் அடுத்தவன் அழகாக இருக்கிறான் என்று உன் உள்ளம் நினைக்கிறதே அந்த குப்பையை அகற்று அழகாகி விடுவாய்* என்றார்.
*༺༻*
ஆம், *மனிதர்களாகிய நமக்கு உள்ள ஒரே பிரச்சினை நாம் ஏழை என்பதல்ல, அடுத்தவன் பணக்காரனாக இருப்பது தான்.* அதுவே நாளடைவில் மன நோயாக மாறிவிடும்.
*உடல் நோயிக்குத்தான் Medication மன நோய் போக்க Meditation.*
*༺༻*
அகவே
அடுத்தவரை பார்த்து ஏங்கும் எண்ணத்தை தவிர்த்து
அடுத்தவரை தாங்கும் எண்ணத்தை உருவாக்குவோம்
அதுவும் முடியவில்லையா
அடுத்தவரை தாக்காமல் இருக்கவாவது கற்று கொள்வோம்.
பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்கச்
சிறந்த வழி *மெளனம்;*
பல பிரச்சனைகளைத் தவிர்க்க
மிகச் சிறந்த ஆயுதம் *புன்னகை.*

No comments:

Post a Comment