Tuesday 15 October 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

கவியரசு வாட்ஸ் அப்
குறுஞ்செய்தி & வாட்ஸ் அப் சேவையில் 11வது ஆண்டு.
15.10.2019 செவ்வாய் க்கிழமை
 
👉🏻இன்று டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் பிறந்த நாள் 1931
இவர் இந்தியாவின் 11 ஆவது குடியரசு தலைவராக பணியாற்றிய இந்திய அறிவியலாளரும் நிர்வாகியும் ஆவார்.
கலாம் தமிழ்நாட்டில் இராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார். திருச்சியில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியலும் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார்.
🛰🛰🛰
கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல் ஒன்று
🎶
உன்னை அறிந்தால்...
நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்
(உன்னை)
மானம் பெரியது என்று வாழும் மனிதர்களை
மான் என்று சொல்வதில்லையா
தன்னை தானும் அறிந்து கொண்டு
ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா
(உன்னை)
பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்
சாமிக்கு நிகர் இல்லையா
பிறர் தேவை அறிந்து கொண்டு வாரிக் கொடுப்பவர்கள்
தெய்வத்தின் பிள்ளை இல்லையா (உன்னை)
மாபெரும் சபையினில் நீ நடந்தால் -
உனக்கு மாலைகள் விழவேண்டும்
ஒரு மாசு குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழ வேண்டும்
உன்னை அறிந்தால்...
நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்
படம்: வேட்டைக்காரன்

🙏🏻கண்ணன்சேகர்

No comments:

Post a Comment