Monday 14 October 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

உலகின் மதிப்புமிக்க நாடுகளின் முன்னணி 20 நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 7-வது இடம் கிடைத்துள்ளது.
உலகின் மிகப்பெரிய சொத்து மதிப்பீட்டு நிறுவனமான 'பிராண்டு பினான்ஸ்' நிறுவனம் உலகின் மதிப்புமிக்க நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்நிறுவனம் ஒரு நாட்டிற்கான 'பிராண்டு வேல்யவை கணக்கிட அந்த நாட்டில் விற்பனையாகும் அனைத்து பிராண்டுகளின் 5 ஆண்டு விற்பனை மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள மொத்த வருமானத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்வார்கள்.அந்த வகையில் இந்த ஆண்டின் உலகின் மதிப்புமிக்க நாடுகளின் பட்டியலை அந்நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.
அந்த பட்டியலில் முறையே,1 அமெரிக்கா, 2 சீனா, 3 ஜெர்மனி,4 ஜப்பான்,5 இங்கிலாந்து, 6 பிரான்ஸ் உள்ளது. இதில் கடந்த முறை 9 ஆம் இடத்தில் இருந்த இந்தியா 2 இடங்கள் முன்னேறி 7வது இடத்தை பிடித்துள்ளது. மேலும் 8,கனடா, 9 தென்கொரியா, 10 இத்தாலி ஆகிய இடங்களில் உள்ளன.
இந்தியா பிராண்ட் வேல்யூ கடந்த ஆண்டில் மட்டும் 18.6 சதவீதம் உயர்ந்து 2,18,300 கோடி டாலராக உயர்ந்துள்ளது. உலக சர்வதேச பொருளாதார சரிவின் பாதிப்பிலிருந்து இந்தியா வேகமாக மீண்டது எனவும் தெரிவித்துள்ளது.
நன்றி ராஜப்பா தஞ்சை

No comments:

Post a Comment